முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இங்கி.,க்கு எதிரான டெஸ்ட்: இந்திய அணி பேட்டிங்

வெள்ளிக்கிழமை, 1 ஜூலை 2022      விளையாட்டு
Indian-team 2022 07 01

Source: provided

பர்மிங்காம் : இந்தியாவுக்கு எதிரான 5 ஆவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பவுலிங் செய்ய தீர்மானித்திருக்கிறது.

5 போட்டிகள்... 

கடந்த ஆண்டு ஆகஸ்ட், செப்டம்பரில் இந்திய அணி இங்கிலாந்தில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. இதில் முதல் 4 டெஸ்டுகளில் இரண்டில் இந்தியாவும், ஒன்றில் இங்கிலாந்தும் வெற்றி பெற்றன. மற்றொரு போட்டி 'டிரா'வில் முடிந்ததால் தொடரில் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் கொரோனா பரவல் காரணமாக தள்ளிவைக்கப்பட்ட 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி பர்மிங்காமில் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது.

பும்ரா தலைமையில்... 

இந்திய அணிக்கு இந்தத் டெஸ்ட் போட்டியில் பும்ரா தலைமை தாங்குகிறார். இதனையடுத்து நேற்றைய போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பவுலிங் செய்ய தீர்மானித்தார். இதையடுத்து இந்தியா முதலில் பேட்டிங் செய்தது. இந்தப் போட்டியில் அஸ்வின் இடம்பெறவில்லை. ஆல்ரவுண்டர்களான ரவீந்திர ஜடேஜாவும், ஷர்துல் தாக்குரும் சேர்க்கப்பட்டு இருக்கிறார்கள்.

இந்திய அணி: 

சுப்மன் கில், புஜாரா, ஹனுமா விஹாரி, விராட் கோலி, ஸ்ரேயஸ் ஐயர், ரிஷப் பன்ட், ஜடேஜா, ஷர்துல் தாக்குர், முகமது ஷமி, சிராஜ், பும்ரா.

இங்கிலாந்து அணி: 

அலெக்ஸ் லீஸ், ஜாக் கிராவ்லி, ஓய்லி போப், ஜோ ரூட், ஜானி பேர்ஸ்டோ, பென் ஸ்டோக்ஸ், சாம் பில்லிங்ஸ், மேட்டி பாட்ஸ், பிராட், ஜாக் லீச், ஜேம்ஸ் ஆண்டர்சன்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து