முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கடந்த 10 ஆண்டுகளில் 2018-ல் தான் 18 லாக் அப் மரணங்கள் நடந்துள்ளன : டி.ஜி.பி. சைலேந்திரபாபு தகவல்

சனிக்கிழமை, 2 ஜூலை 2022      தமிழகம்
Silenthra-Babu 2022 06 16

Source: provided

மதுரை : தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளில் அதிகபட்சமாக 2018-ல் தான் 18 காவல் நிலைய மரணங்கள் ஏற்பட்டுள்ளதாக டி.ஜி.பி. சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார். 

தமிழக காவல் நிலையங்களில் கைதி மரணங்களை தடுப்பது தொடர்பாக டி.ஜி.பி. சைலேந்திரபாபு மாவட்டம் தோறும் விழிப்புணர்வை கருத்தரங்குகளை நடத்தி வருகிறார். இந்நிலையில் மதுரை தெப்பக்குளம் தனியார் கல்லூரியில் காவல் நிலைய மரணம் தொடர்பாக விழிப்புணர்வு கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தமிழக போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு கூறியதாவது, 

அகில இந்திய அளவில் சுமார் 950 மரணங்கள், காவல் நிலையத்தில் கடந்த 10 ஆண்டுகளாக நடந்துள்ளன. தமிழகத்தில் மட்டும் 84 மரணங்கள் அரங்கேறி உள்ளது. கடந்த 2018-ம் ஆண்டு முதல் 18 காவல் நிலைய மரணங்கள் தமிழகத்தில் நடந்துள்ளன.

இது தொடர்பாக 80 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் 12 வழக்குகளில் மட்டுமே போலீசாரின் தவறு காரணமாக மரணம் நிகழ்ந்ததாக சி.பி.சி.ஐ.டி. போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. தமிழகத்தில் இனி ஒருவர் கூட காவல்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் போது உயிரிழக்கக் கூடாது என்று முதல்வர் உத்தரவிட்டு உள்ளார் என்று கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!