முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கரூரில் நடைபெற்ற அரசு விழா: 99 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர் மு.க. ஸ்டாலின் : பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்

சனிக்கிழமை, 2 ஜூலை 2022      தமிழகம்
CM-2 2022 07 02

Source: provided

கரூர் : கரூரில்  நடைபெற்ற அரசு விழாவில் முதல்வர் மு.க. ஸ்டாலின் நேற்று ரூ. 28.60  கோடி செலவில் முடிவுற்ற  95  திட்டப் பணிகளை திறந்து வைத்து,  ரூ.581.44  கோடி மதிப்பீட்டிலான  99  புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி,  80,750   பயனாளிகளுக்கு ரூ.500.83  கோடி  மதிப்பீட்டில்  அரசு நலத்திட்ட உதவிகளை  வழங்கினார்.

மருத்துவம்  மற்றும்  மக்கள்  நல்வாழ்வுத்துறை சார்பில் துணை சுகாதார நிலைய கட்டிடங்கள், வேளாண்மை  பொறியியல்  துறை சார்பில், மண் பரிசோதனை நிலையம், நில  அளவை  பதிவேடுகள்  துறை சார்பில் குறுவட்ட  அளவருக்கான  குடியிருப்புடன்  கூடிய  அலுவலக கட்டிடடங்கள்,  ஊரக  வளர்ச்சி  மற்றும்  ஊராட்சித்  துறை, கூட்டுறவு துறை, பொதுப்பணித்துறை  (கட்டிடம்),  ஆதிதிராவிடர்  மற்றும்  பழங்குடியினர்  நலத்துறை,  சமூகநல துறை,  நீர்வளத் துறை ஆகிய துறைகளின் சார்பில்  மொத்தம் 28 கோடியே 60 லட்சம் ரூபாய் செலவில் முடிவுற்ற 95 பணிகளை முதல்வர் நேற்று திறந்து வைத்தார். 

மேலும் பல்வேறு துறைகளின் சார்பில் 581  கோடியே  44 லட்சம்  ரூபாய் மதிப்பீட்டிலான  99 புதிய திட்டப் பணிகளுக்கு  முதல்வர் நேற்று அடிக்கல் நாட்டினார். அதை தொடர்ந்து பல்வேறு துறைகளின் சார்பில் மொத்தம் 80,750 பயனாளிகளுக்கு  500 கோடியே 83 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான அரசு நலத்திட்ட உதவிகளை முதல்வர் வழங்கினார். 

இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் கே.என். நேரு, வி.செந்தில்பாலாஜி, எஸ்.எஸ். சிவசங்கர், நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி, சட்டமன்ற உறுப்பினர்கள் சிவகாமசுந்தரி, மாணிக்கம், கரூர் மாநகராட்சி மேயர்  கவிதா, துணை மேயர் சரவணன், கரூர் மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து