முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமி உள்ளிட்ட தேசிய ஜனநாயக கூட்டணித் தலைவர்களை சந்தித்து ஆதரவு கோரினார் திரெளபதி முர்மு

சனிக்கிழமை, 2 ஜூலை 2022      இந்தியா
Murmu 2022 07 02

Source: provided

புதுச்சேரி : தேசிய ஜனநாயகக் கூட்டணி ஜனாதிபதி வேட்பாளர் திரெளபதி முர்மு நேற்று புதுச்சேரி வந்தார். அங்கு புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமி உள்ளிட்ட பா.ஜ.க. கூட்டணி தலைவர்களை சந்தித்து ஆதரவு கோரினார்.

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின், ஜனாதிபதி வேட்பாளர் திரௌபதி முர்மு, நேற்று பிற்பகல் 11.45 மணிக்கு புதுச்சேரிக்கு வந்தார். புதுச்சேரியில் உள்ள அக்கார்டு சொகுசு உணவகத்தில் புதுவை மாநில தேசிய ஜனநாயகக் கூட்டணித் தலைவர்கள் கூட்டத்தில் அவர் பங்கேற்றார்.

அப்போது தேசிய ஜனநாயக கூட்டணித் தலைவர்களான என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் முதல்வர் என்.ரங்கசாமி, பாஜக மாநில தலைவர் வி. சாமிநாதன், உள்துறை அமைச்சர் ஏ.நமச்சிவாயம் மற்றும் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், அதிமுக மாநிலச் செயலர் அன்பழகன் என். ஆர்.காங்கிரஸ் மாநிலச் செயலர் ஜெயபால், என். ஆர்.காங்கிரஸ், பாஜக எம்எல்ஏக்கள், எம்பிக்கள் ஆகியோரை சந்தித்து ஆதரவு திரட்டினார். 

புதுவை தனியார் நட்சத்திர ஹோட்டலில், கூட்டணித் தலைவர்களை திரெளபதி முர்மு சந்தித்து அவர் பேசினார். அவருடன் மத்திய அமைச்சர் முரளிதரன் உள்ளிட்டோர்  இருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து