முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பா.ஜ.க.வின் 2 நாள் தேசிய செயற்குழு கூட்டம் ஐதராபாத்தில் தொடங்கியது : தொண்டர்களுடன் நடனமாடிய குஷ்பு

சனிக்கிழமை, 2 ஜூலை 2022      இந்தியா
Khushbu 2022 07 02

Source: provided

ஐதராபாத் : பா.ஜ.க.வின் 2 நாள் தேசிய செயற்குழு கூட்டம் நேற்று ஐதராபாத்தில் தொடங்கியது. கூட்டம் தொடங்குவதற்கு முன் சர்வதேச மாநாட்டு மையத்திற்கு வெளியே தெலங்கானா நாட்டுப்புற நடனக் கலைஞர்களுடன் சேர்ந்து பா.ஜ.க. தேசிய செயற்குழு உறுப்பினரும், தமிழ் நடிகையுமான குஷ்பு சுந்தர் நடனமாடி தொண்டர்களை உற்சாகமடைய வைத்தார். 

தெலங்கானா மாநிலம், ஐதராபாத்தில் 2 நாள் நடைபெறும் பா.ஜ.க. தேசிய செயற்குழு கூட்டத்தை பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா நேற்று தொடங்கி வைத்தார். தேசிய செயற்குழு கூட்டத்தில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்கிறார்.

இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி நேற்று மாலை ஐதராபாத் வந்தடைந்தார். இன்று நடைபெறும் தேசிய செயற்குழுவில் மோடி உரையாற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

கொரோனா பெருந்தொற்று பிறகு பா.ஜ.க. தேசிய செயற்குழு உறுப்பினர்களின் முழுமையான பங்கேற்புடன் கூட்டம் நடைபெறுவது இதுவே முதல் முறை. கட்சியின் சர்வதேச மாநாட்டை முன்னிட்டு ஐதராபாத் நகரம் முழுவதும் பா.ஜ.க. கொடிகள் மற்றும் பதாகைகளுடன் காவி நிறங்களாகவே காட்சி அளிக்கின்றன. மத்திய அரசின் சாதனைகளை பறைசாற்றும் வகையில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. நகரின் ஒவ்வொரு மூலை முடுக்கிலும் பெரிய பெரிய கட்அவுட்கள் மற்றும் உயர்மட்ட பா.ஜ.க. தலைவர்களின் பேனர்கள் அலங்கரிக்கப்பட்டுள்ளன.

முன்னதாக பா.ஜ.க.வின் தேசிய செயற்குழு கூட்டம் தொடங்குவதற்கு முன் சர்வதேச மாநாட்டு மையத்திற்கு வெளியே தெலங்கானா நாட்டுப்புற நடனக் கலைஞர்களுடன் சேர்ந்து பா.ஜ.க. தேசிய செயற்குழு உறுப்பினரும், தமிழ் நடிகையுமான குஷ்பு சுந்தர் நடனமாடி தொண்டர்களை உற்சாகமடைய வைத்தார். 

தேசிய பொதுச் செயலாளர்கள் மற்றும் தேசிய நிர்வாகிகள் கூட்டங்கள் மற்றும் தேசிய செயற்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இன்று பரேட் மைதானத்தில் பிரதமர் நரேந்திர மோடி உரையுடன் பொதுக்கூட்டமும் நடைபெறகிறது. ஐதராபாத்தில் 2 நாள் நடைபெறும் பா.ஜ.க. தேசிய செயற்குழு கூட்டத்தை பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தொடங்கி வைத்தார். 

ஐதராபாத் சர்வதேச மாநாட்டில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, 19 மாநில முதல்வர்கள் மற்றும் பா.ஜ.க. மூத்த தலைவர்களும் பங்கேற்க உள்ளதால் உச்சகட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பா.ஜ.க. செயற்குழு கூட்டத்தை தொடர்ந்து தெலங்கானா அரசியலில் திருப்பங்கள் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து