முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நெல்லையப்பர் கோவில் ஆனித்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடக்கம்

சனிக்கிழமை, 2 ஜூலை 2022      ஆன்மிகம்
Nellaipar-temple 2022 07 02

Source: provided

நெல்லை : பிரசித்தி பெற்ற நெல்லையப்பர் -காந்திமதி அம்மன் கோவிலில் பல்வேறு திருவிழாக்கள் நடைபெற்று வருகிறது. அவற்றில் ஆனித்தேரோட்டம் சிறப்பு பெற்றது. 516-வது ஆண்டு ஆனித்தேரோட்டம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 

இதையொட்டி இன்று காலை 7.40 மணிக்கு சுவாமி -அம்மாள் பூக்கோயில் சப்பரத்தில் எழுந்தருளி உள்பிரகாரத்தில் வீதி உலா நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து காலை 8 மணிக்கு மேல் கோவில் கொடிமரத்தில் கொடியேற்றப்படுகிறது.

ஆனித்திருவிழாவையொட்டி தினமும் காலை, மாலை நேரங்களில் சுவாமி, அம்பாள் வீதி உலா நடக்கிறது. நின்றசீர் நெடுமாறன் கலையரங்கில் தினமும் கலைநிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 11-ம் தேதி (திங்கட்கிழமை )நடைபெறுகிறது. 

கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளுக்கு பின்னர் இந்தாண்டு நடக்கும் தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்கிறார்கள். இந்நிலையில் இன்று கொடியேற்றம் நடைபெறுவதையொட்டி கொடிமரம் மற்றும் கோவில் வளாகங்கள் சுத்தப்படுத்தப்பட்டு கிருமிநாசினி தெளிக்கும் பணி நடைபெற்று வருகிறது. ஏற்கனவே பந்தல் அமைக்கும் பணி முடிவடைந்துள்ளது. தொடர்ந்து கொடியேற்றம் மற்றும் தேரோட்டத்திற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து