முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மணிப்பூரில் மீண்டும் நிலச்சரிவு: அசாம் மாநிலத்தை சேர்ந்த 7 பேர் உயிரோடு புதைந்தனர்

சனிக்கிழமை, 2 ஜூலை 2022      இந்தியா
Manipur 2022 07 02

Source: provided

இம்பால் : மணிப்பூரில் நேற்று மீண்டும் நிலச்சரிவு ஏற்பட்டதில் அசாம் மாநிலத்தை சேர்ந்த 7 பேர் உயிரோடு புதைந்தனர். கடந்த புதன்கிழமை ஏற்பட்ட நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்த நிலையில் மேலும் ஒரு நிகழ்வு நடைபெற்றுள்ளது. 

மணிப்பூர் மாநிலத்தின் நானி மாவட்டத்தில் ரயில்வே கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்தன. நேற்று அப்பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இரண்டு பாதுகாப்புப் பணியாளர்கள் உட்பட அசாம் மாநிலத்தைச் சேர்ந்த 7 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 12 தொழிலாளர்களை காணவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

முன்னதாக கடந்த புதன்கிழமை இரவு துப்புல் யார்டு ரயில்வே கட்டுமான முகாமில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஒட்டுமொத்தமாக உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 25 ஆக அதிகரித்துள்ளது, மேலும் காணாமல் போன 38 பேரை மீட்கும் பணிகள் நடைபெற்றன. நான்கு பேரின் உடல்கள் வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டு அடையாளம் காணப்பட்டுள்ளன. 

மணிப்பூர் மாநிலத்தில் நடைபெற்று வரும் பல்வேறு ஒப்பந்த பணிகளில் அசாம் மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் பணியாற்றி வரும் நிலையில் ரயில்வே கட்டுமானப் பணியின் போது ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கிய அசாம் மாநிலம் மோரிகான் மாவட்டத்தைச் சேர்ந்த 22 பேர்களின் பெயர்களை அசாம் அரசு வெளியிட்டது. இவர்களில், ஐந்து பேர் காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டனர், ஐந்து பேர் இறந்ததாக உறுதி செய்யப்பட்டது. மேலும் 12 பேர் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து