முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பா.ஜ.க தேசிய செயற்குழு கூட்டம்: ஐதராபாத் வந்த பிரதமர் மோடிக்கு கவர்னர் தமிழிசை வரவேற்பு

சனிக்கிழமை, 2 ஜூலை 2022      இந்தியா
Tamilsai 2022 02 04

Source: provided

ஐதராபாத் : பா.ஜ.க தேசிய செயற்குழு கூட்டத்தில் பங்கேற்க நேற்று ஐதராபாத் வந்த பிரதமர் மோடிக்கு கவர்னர் தமிழிசை வரவேற்பு அளித்தார். மாநில அரசு சார்பில் ஒரே ஒரு அமைச்சர் மட்டும் பங்கேற்றார்.

2022-ம் ஆண்டுக்கான பா.ஜ.க தேசிய செயற்குழு கூட்டம் ஐதராபாத்தில் நேற்று தொடங்கியது. நேற்றும், இன்றும் இரண்டு நாட்கள் கூட்டம் நடைபெறுகிறது. கூட்டத்தில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் பங்கேற்கிறார்கள். தேசிய அளவிலான பா.ஜ.கவின் முக்கிய நிர்வாகிகள் செயற்குழுவில் பங்கேற்கிறார்கள். தமிழகம் சார்பில் மாநில தலைவர் அண்ணாமலை, குஷ்பு பங்கேற்கின்றனர். 

பா.ஜ.க தேசிய செயற்குழு கூட்டத்தில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி நேற்று பிற்பகல் ஐதராபாத் வந்து சேர்ந்தார். அவரை விமான நிலையத்தில் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் வரவேற்றார். ஐதராபாத் வந்து இறங்கியதும் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், கட்சியை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் பல்வேறு விஷயங்கள் குறித்து செயற்குழுவில் விவாதிக்க உள்ளதாக கூறி உள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து