முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பொதுமக்கள் முகக்கவசம் அணிவது கட்டாயம்: சென்னை மாநகராட்சி

திங்கட்கிழமை, 4 ஜூலை 2022      தமிழகம்
Chennai 2022-01-22

Source: provided

சென்னை  பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று சென்னை மாநகராட்சி சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. சென்னையில் தினசரி கொரோனா பாதிப்பு ஆயிரத்தை தாண்டி பதிவாகிவருகிறது. இந்நிலையில் பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று சென்னை மாநகராட்சி சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

இது குறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில், கடந்த 2 வாரங்களாக சென்னையில் கொரோனா வைரஸ் தொற்று அதிக அளவில் பரவி வருகிறது. பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். குறிப்பாக வணிக வளாகங்கள் போன்ற பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை தவறாமல் பின்பற்ற வேண்டும். பொது சுகாதாரத்துறையின் அறிவுறுத்தலின்படி முகக்கவசம் அணிவது குறித்து பொதுமக்களிடையே மாநகராட்சியின் சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. 

வணிக வளாகங்கள், திரையரங்கங்கள், துணிக் கடைகள் வணிக நிறுவனங்களின் ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் முகக்கவசம் அணிவதை அந்தந்த நிறுவனமே உறுதிப்படுத்த வேண்டும். ஒவ்வொரு தனிநபரும் கோவிட் தொற்றிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள வெளியில் செல்லும் பொழுது தவறாமல் முகக்கவசம் அணிந்து கொள்ள வேண்டும். கொரோனா தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ள மாநகராட்சியின் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து