முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

என்னை கேலி செய்தவர்களை மன்னித்துவிடுகிறேன்: பட்னாவீஸ்

திங்கட்கிழமை, 4 ஜூலை 2022      இந்தியா
Patnavis 2022 07 04

என்னை கேலி செய்தவர்களை மன்னித்துவிடுகிறேன் என்று மகாராஷ்டிரா துணை முதல்வர் பட்னாவீஸ் தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிர சட்டப்பேரவையில் நேற்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வா் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அரசு வெற்றி பெற்றது. மகாராஷ்டிர சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க, 145 வாக்குகள் தேவைப்படும் நிலையில், 164  வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளது.  இதையடுத்து சட்டப்பேரவையில் பேசிய துணை முதல்வர் தேவேந்திர பட்னாவீஸ், 'நான் திரும்பி வருவேன் என்று கூறியிருந்தேன். ஆனால், நான் அப்படிச் சொன்னதும் பலர் என்னைக் கேலி செய்தார்கள். 

 

நான் கூறியதுபோல திரும்பி வந்ததுடன் என்னுடன் ஏக்நாத் ஷிண்டேவையும் அழைத்து வந்துள்ளேன். என்னை கேலி செய்தவர்களை நான் பழிவாங்கமாட்டேன். நான் அவர்களை மன்னித்துவிடுகிறேன். ஏனெனில், அரசியலுக்கு இது சரிவராது. அரசியலில் எதிரிகளின் குரலுக்கு செவிசாய்க்க அனைவரும் தயாராக வேண்டும். அறிக்கைகள், சமூக ஊடகங்களில் கருத்துகளை பதிவிட்டதற்காக மக்களை சிறையில் அடைக்கிறார்கள். நமக்கு எதிராக பேசுபவர்களுக்கு பதில் அளிக்க நாம் தயாராக இருக்க வேண்டும். விமர்சனங்களுக்கு நாம் சரியான முறையில் பதிலளிக்க வேண்டும் என்று பேசியுள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!