முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

போரினால் சிதைந்த உக்ரைனை மறுசீரமைக்க 750 பில்லியன் டாலர்கள் தேவை: ஜெலென்ஸ்கி

செவ்வாய்க்கிழமை, 5 ஜூலை 2022
Jelensky 2022 03 02

Source: provided

கீவ் : போரினால் சிதைந்த நாட்டை மீண்டும் மறுசீரமைக்க சுமார் 750 பில்லியன் டாலர்கள் தேவைப்படுவதாக உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். 

சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற உக்ரைன் மீட்பு மாநாட்டில் காணொலி வாயிலாக பங்கேற்ற ஜெலென்ஸ்கி, ரஷ்ய படையெடுப்பால் ஏற்பட்ட முழு சேத விவரங்களையும், நாட்டின் தேவைகளையும் விவரித்தார். தொடர்ந்து அவர் பேசியதாவது, 

உக்ரைனை மீண்டும் கட்டியெழுப்புவது ஒரு நாட்டுடைய பணி அல்ல. உலக நாடுகளின் பொதுவான பணியாகும். உக்ரைனை மறுசீரமைப்பது உலகளாவிய அமைதிக்கான ஆதரவிற்கு மிகப்பெரிய பங்களிப்பாகும் என்று தெரிவித்தார். 

இந்நிலையில்  கருங்கடல் துறைமுக நகரமான மைக்கோலைவ் மீது ரஷ்ய ஏவுகணைகள் தாக்கியதாகவும், இதனால் நகரம் முழுவதும் வான்வழித் தாக்குதல் சைரன்கள் இயக்கப்பட்டதாகவும் அம்மாகாண மேயர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது டெலிகிராம் பக்கத்தில், காலையில், ஆக்கிரமிப்பாளர்கள் மைக்கோலைவ் மீது ராக்கெட்டுகளை வீசினர். மீட்புப் பணியாளர்கள், மருத்துவர்கள், அவசரகாலக் குழுக்கள் மற்றும் பயன்பாட்டுப் பணியாளர்கள் ஏற்கனவே தரையில் பணியாற்றி வருகின்றனர். மேலும் இது தொடர்பான விவரங்களை பிறகு உங்களுக்குத் தெரிவிப்பேன் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து