முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெல்லியிலிருந்து புறப்பட்ட விமானம் பாகிஸ்தானில் அவசரமாக தரையிறக்கம்

செவ்வாய்க்கிழமை, 5 ஜூலை 2022      உலகம்
Spicejet 2022-07-05

Source: provided

இஸ்லாமாபாத் : டெல்லியிலிருந்து புறப்பட்ட ஸ்பைஸ்ஜெட் விமானம் பாகிஸ்தானில் அவசரமாக தரையிறக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தை சேர்ந்த எஸ்.ஜி.-11 விமானம் டெல்லியிலிருந்து துபாய் நோக்கி 150 பயணிகளுடன் நேற்று காலை புறப்பட்டுச் சென்றது.  இந்நிலையில், பாகிஸ்தான் வான்வெளியில் பறந்து கொண்டிருந்த போது ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாரால் கராச்சி விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.

விமானத்தில் பயணித்த அனைத்து பயணிகளும் பாதுகாப்புடன் இருப்பதாக முதல்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.  இது குறித்து ஸ்பைஸ்ஜெட் செய்தித் தொடர்பாளர் கூறியதாவது,

விமானத்தில் இண்டிக்கேட்டர் விளக்கில் கோளாறு ஏற்பட்டதால் கராச்சிக்கு திருப்பி விடப்பட்டது. பாதுகாப்பாக தரையிறக்கப்பட்ட விமானத்திலிருந்து பயணிகள் இறக்கி விடப்பட்டுள்ளனர். 

அவசர தரையிறக்கத்திற்கு அனுமதி கோரவில்லை. சாதாரணமாகத்தான் தரையிறக்கப்பட்டது. பயணிகளுக்கு தேவையான உணவுகள் வழங்கப்பட்டுள்ளது. கராச்சிக்கு மாற்று விமானம் சென்றவுடன் பயணிகள் அனைவரும் துபைக்கு புறப்பட்டுச் செல்வார்கள் என்று தெரிவித்தார். 

ஆனால், விமானப் போக்குவரத்து இயக்ககம் வெளியிட்ட செய்தியில், விமானத்தின் இடது டேங்கில் எரிபொருள் குறையும் அசாதாரண சூழலை கவனித்த குழுவினர் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டனர். தொடர்ந்து கராச்சி விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டது. விமானம் கிளம்பும் போது எரிபொருள் கசிவு எதுவும் காணப்படவில்லை எனத் தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!