முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வெள்ளப் பெருக்கு: குற்றாலம் மெயினருவியில் குளிக்க தடை : ஐந்தருவியில் சுற்றுலா பயணிகள் நீராடினர்

செவ்வாய்க்கிழமை, 5 ஜூலை 2022      தமிழகம்
Kuttalam 2022-07-05

Source: provided

தென்காசி : வெள்ளப்பெருக்கால் குற்றாலம் மெயினருவில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது.  இதனால் ஏமாற்றமடைந்த சுற்றுலா பயணிகள், நேற்று பழைய குற்றால அருவி, ஐந்தருவியில் குளித்து மகிழ்ந்தனர். 

குற்றாலத்தில் கடந்த சில தினங்களாக சாரல் மழை பெய்து வருகிறது. கடந்த திங்களன்று பெய்த சாரல் மழை காரணமாக அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்தது.

இதையடுத்து மெயினருவி, ஐந்தருவி ஆகியவற்றில் பாதுகாப்பு கருதி அன்றைய தினம் மாலை முதல் சுற்றுலா பயணிகள் குளிக்க போலீசார் தடை விதித்தனர். நேற்று முன்தினம் காலையில் வெள்ளப்பெருக்கு குறைந்ததையடுத்து 2 அருவிகளிலும் விதிக்கப்பட்ட தடை விலக்கி கொள்ளப்பட்டது. நேற்று முன்தினம் மதியத்திற்கு பின்னர் மேக கூட்டம் திரண்டு மழை பெய்தது. இதனால் இரவு மீண்டும் தண்ணீர் வரத்து அதிகரித்தது. 

இதையடுத்து நேற்று முன்தினம் இரவு 11 மணி முதல் மெயினருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க போலீசார் தடை விதித்தனர். நேற்று காலை மெயினருவியில் குளிக்க வந்த சுற்றுலா பயணிகள், தடை காரணமாக ஏமாற்றத்துடன் திரும்பினர். இருப்பினும் ஐந்தருவி, பழைய குற்றால அருவிகளில் தண்ணீர் மிதமாக விழுந்ததால் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக நீராடி மகிழ்ந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!