முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புதிதாக 2,213 பேருந்துகள் வாங்க தமிழக அரசுக்கு ஐகோர்ட் அனுமதி

செவ்வாய்க்கிழமை, 5 ஜூலை 2022      தமிழகம்
Chennai-High-Court 2021 3

Source: provided

சென்னை : தமிழகத்தில் புதிதாக 2,213 பேருந்துகள் வாங்க தமிழக அரசுக்கு நிபந்தனையுடன் சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

213 புதிய பேருந்துகள், 500 மின்கல பேருந்துகள் உள்ளிட்ட 2,213 பேருந்துகளை கொள்முதல் செய்ய தமிழக அரசுக்கு அனுமதி அளித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

மேலும் மாற்றுத்திறனாளிகள் எளிதில் அணுகும் வகையில் உரிய வசதிகளுடன் பேருந்துகளை கொள்முதல் செய்ய நீதிமன்றம் நிபந்தனை விதித்துள்ளது. மேலும், பேருந்துகள் கொள்முதலில் மாற்றுத்திறனாளிகள் உரிமை சட்ட விதிகளை பின்பற்றவும் உயர்நீதிமன்றம் நிபந்தனை விதித்துள்ளது.

கொள்முதல் செய்ய திட்டமிடப்பட்டுள்ள 642 பேருந்துகளில் 242 பேருந்துகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு வசதியாக தாழ்தள பேருந்துகளாக கொள்முதல் செய்யவுள்ளதாக தமிழக அரசு சார்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!