முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இதுவரை 10 ஆயிரம் பெண்கள் விண்ணப்பம்: அக்னி வீரர்களில் பெண்கள் மட்டும் 20 சதவீதம் பேர் இருப்பர்: கடற்படை

செவ்வாய்க்கிழமை, 5 ஜூலை 2022      இந்தியா
India 2022-07-05

Source: provided

புதுடெல்லி : முதல் பேட்ச் அக்னி வீரர்களில் 20சதவீதம் பேர் பெண்கள் இருக்கக்கூடும் என்று இந்திய இந்திய கடற்படை தெரிவித்துள்ளது. இதுவரை வந்த விண்ணப்பங்களில் தகுதியானோரை அலசி ஆராய்ந்ததன் அடிப்படையில் இந்திய கடற்படை இந்தத் தகவலைப் பகிர்ந்துள்ளது. அதேபோல் விமானப்படையில் சேர இதுவரை 2.7 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர் என்று தகவலும் வெளியாகியுள்ளது. நேற்று மாலையுடன் விண்ணப்பிக்க அவகாசம் நிறைவு பெற்றது.

இந்நிலையில், இந்திய கடற்படை தான் இதுவரை பெற்ற விண்ணப்பங்களில் ஏற்கத்தக்க தகுதியுள்ளவற்றில் 20 சதவீதம் பெண்களுடையது என்று தெரிவித்துள்ளது. அவ்வாறாக தேர்வாகும் 20 சதவீதம் பெண் அக்னி வீரர்கள் நாடு முழுவதும் உள்ள பல்வேறு கடற்படை தளங்களுக்கு பயிற்சிக்காக அனுப்பிவைக்கப்படுவார்கள்.

கடற்படை அக்னி வீரர்கள் திட்டத்தின் கீழ் ஆள்சேர்ப்பை ஜூலை 1ல் தொடங்கியது. ஜூலை 4-ம் தேதி நிலவரப்படி 10,000 பெண்கள் விண்ணப்பித்துள்ளனர். அக்னி பாதை திட்டமானது பாலின சமத்துவத்துடன் செயல்படுத்தப்படும். இப்போது, இந்திய கடற்படையில் முன்னணி போர்க்கப்பல்களில் 30 பெண் உயர் அதிகாரிகள் தலைமைப் பொறுப்பை வகிக்கின்றனர்.

கடற்படையில் சேரும் பெண் அக்னி வீரர்கள், ஆர்டினன்ஸ், எலக்ட்ரிக்கல் மற்றும் நேவல் ஏர் மெக்கானிக்ஸ், தொலைதொடர்பு செயல்பாடு, எலக்ட்ரானிக் வார்ஃபேர், கன்னரி வெப்பஸ், சென்சார்ஸ் என பலதுறைகளிலும் அனுமதிக்கப்படுவார்கள். மேலும், முதன்முறையாக போர்க்கப்பல்களில் மாலுமிகளாகவும் பணியமர்த்தப்படுவர் என்று கடற்படை தெரிவித்துள்ளது. பெண்கள் மாலுமிகளாகச் செல்லும் காலம் வந்துவிட்டது என்று கடற்படை உயரதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து