முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அடுத்த டெஸ்ட் போட்டி: இந்திய அணி வங்கதேசத்தை டிசம்பரில் எதிர்கொள்கிறது

புதன்கிழமை, 6 ஜூலை 2022      விளையாட்டு
Indian-team 2022-07-06

Source: provided

லண்டன் : வரும் டிசம்பர் மாதம் அடுத்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வங்கதேசத்தை எதிர்கொள்கிறது.

மே.இ.தீவுகள் பயணம்...

இந்தியாவுக்கு எதிரான 5-வது டெஸ்டில் இங்கிலாந்து அணி அபாரமாக விளையாடி 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்று தொடரை சமன் செய்தது. டெஸ்ட் தொடருக்குப் பிறகு இங்கிலாந்தில் 3 ஒருநாள், 3 டி20 ஆட்டங்களில் விளையாடுகிறது இந்திய அணி. இதன்பிறகு மேற்கிந்தியத் தீவுகளுக்குச் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள், 5 டி20 ஆட்டங்களில் விளையாடுகிறது.

டி-20 உலகக்கோப்பை...

அக்டோபர் - நவம்பரில் டி20 உலகக் கோப்பைப் போட்டியில் பங்கேற்கிறது. அக்டோபர் 16 முதல் நவம்பர் 13 வரை டி20 உலகக் கோப்பை நடைபெறுகிறது. இப்போட்டி முடிந்த பிறகு நியூசிலாந்துக்குச் சென்று 3 டி20, 3 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடுகிறது. இவை தான் அதிகாரபூர்வமாக அட்டவணையுடன் அறிவிக்கப்பட்ட தொடர்கள், போட்டிகள். 

வங்க தேசத்துக்கு...

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணிக்கு இன்னும் 6 டெஸ்டுகள் மீதமுள்ளன. வங்கதேசத்துக்கு எதிராக 2 டெஸ்டுகள், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 4 டெஸ்டுகள். டிசம்பரில் வங்கதேசத்துக்குச் சென்று 2 டெஸ்டுகளில் விளையாடவுள்ளது இந்திய அணி. அதன்பிறகு 2023 தொடக்கத்தில் ஆஸ்திரேலிய அணி இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்து 4 டெஸ்டுகளில் விளையாடுகிறது. இந்த 6 டெஸ்டுகளிலும் இந்திய அணி வெற்றி பெற்றால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெறுவதற்கான வாய்ப்பு உருவாகும்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!