முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

3 வகை கிரிக்கெட் போட்டியில் தொடர் நாயகன் விருது: பும்ரா புதிய மைல் கல்

புதன்கிழமை, 6 ஜூலை 2022      விளையாட்டு
Bumra 2022 07 04

Source: provided

லண்டன் : இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தொடர் நாயகன் விருது வென்ற பும்ரா புதிய சாதனை படைத்துள்ளார்.

இங்கிலாந்து அணி...

இந்தியாவுக்கு எதிரான 5-வது டெஸ்டில் இங்கிலாந்து அணி அபாரமாக விளையாடி 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்று தொடரை சமன் செய்தது. 5-வது டெஸ்டில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று தொடரை சமன் செய்ய 378 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஜோ ரூட், பேர்ஸ்டோ அதிரடியாக விளையாடி இங்கிலாந்து அணிக்கு மறக்க முடியாத வெற்றியை வழங்கினார்கள். 76.4 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 378 ரன்கள் எடுத்து மகத்தான வெற்றியை அடைந்தது இங்கிலாந்து அணி. 

தொடர் நாயகன்...

ஜோ ரூட் 142, பேர்ஸ்டோ 114 ரன்களுடன் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்கள். இதனால் டெஸ்ட் தொடர் 2-2 என சமன் ஆனது. 2007-க்குப் பிறகு இங்கிலாந்தில் டெஸ்ட் தொடரை வெல்லும் வாய்ப்பு இந்திய அணிக்குக் கிடைத்தது. ஆனால் ஜோ ரூட்டும் பேர்ஸ்டோவும் மிகச் சிறப்பாக விளையாடி இங்கிலாந்து அணி 5-வது டெஸ்டை வெல்ல உதவினார்கள்.  இங்கிலாந்து அணியின் தொடர் நாயகனாக ஜோ ரூட்டும் இந்திய அணியின் தொடர் நாயகனாக பும்ராவும் தேர்வானார்கள்.

தொடர் நாயகன்...

இதையடுத்து டெஸ்ட், ஒருநாள், டி20 என மூன்று வகை கிரிக்கெட் போட்டிகளிலும் தொடர் நாயகன் விருதை வென்ற 2-வது இந்தியப் பந்துவீச்சாளர் என்கிற பெருமையை பும்ரா பெற்றுள்ளார். இதற்கு முன்பு புவனேஸ்வர் குமார் இச்சாதனையைப் படைத்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!