முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காஷ்மீரில் 2 நாட்களுக்கு பிறகு அமர்நாத் புனித யாத்திரை மீண்டும் தொடங்கியது

திங்கட்கிழமை, 11 ஜூலை 2022      ஆன்மிகம்
Amarnath 2022-07-11

காஷ்மீரில் 2 நாட்களுக்கு பிறகு அமர்நாத் புனித யாத்திரை நேற்று மீண்டும் தொடங்கியது. 

கொரோனா தொற்றுநோய் காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக யாத்ரீகர்கள் யாரும் அனுமதிக்கப்படாத நிலையில், இந்த ஆண்டு ஜூன் 30ம் தேதி முதல் அமர்நாத் யாத்திரை மீண்டும் தொடங்கியது. ஜம்மு மற்றும் காஷ்மீரில் அமர்நாத் புனித யாத்திரைக்கு பக்தர்கள் செல்லும் குகை அருகேயுள்ள பகுதியில் கடந்த 8-ம் தேதி மேகவெடிப்பு, வெள்ளப்பெருக்கால் கூடாரங்கள் அடித்துச் செல்லப்பட்டதில் 16-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இதனையடுத்து, காயமடைந்த நபர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கும், படுகாயமடைந்த நபர்களை ஸ்ரீநகரில் இருக்கும் மருத்துவமனைகளுக்கும் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். மீட்பு பணிகள் நடந்த நிலையில் அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. புனித பயணம் மேற்கொள்ளும் பக்தர்கள் முகாம்களிலேயே தங்கியிருக்க அறிவுறுத்தப்பட்டனர். அமர்நாத் குகை பகுதியில் மேகவெடிப்பு ஏற்பட்ட பகுதியருகே, இந்தோ-திபெத்திய எல்லை போலீசார், தேசிய மற்றும் மாநில பேரிடர் பொறுப்பு படையினர் உள்ளிட்ட பல குழுக்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

இதுவரை நடந்த மீட்பு பணியில் 16 பேரின் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில், அவர்களது உடல்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. அமர்நாத் புனித யாத்திரையில் மேகவெடிப்பில் காயமடைந்து மீட்கப்பட்ட நபர்களில் ஒரு சிலர் ஸ்ரீநகரில் உள்ள ஷெர்-இ-காஷ்மீர் மருத்துவ அறிவியல் மையத்தில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அமர்நாத் புனித யாத்திரை மேகவெடிப்பு மற்றும் பெருமழை ஆகியவற்றால் தற்காலிக ரத்து செய்யப்பட்ட நிலையில், நேற்று மீண்டும் தொடங்கியது. இதனையடுத்து பஞ்சர்னி மார்க்கத்தில் அமர்நாத் யாத்திரை தொடங்கி உள்ள நிலையில், பக்தர்கள் பால்டால் வழியே செல்லத்தடை விதிக்கப்பட்டுள்ளது.      

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!