முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தங்கம் விலை ரூ. 128 உயர்ந்து பவுன் ரூ. 37,568-க்கு விற்பனை

சனிக்கிழமை, 23 ஜூலை 2022      வர்த்தகம்
gold-2022-07-07

Source: provided

சென்னை : தங்கம் விலை சவரனுக்கு ரூ. 128 உயர்ந்து பவுன் ரூ. 37,568-க்கு நேற்று விற்பனையானது. 

தங்கம் விலையில் ஏற்றத்தாழ்வு நிலவி வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு தங்கம் விலையில் சரிவு ஏற்பட்டதால் பவுன் ரூ. 37 ஆயிரத்துக்கு கீழ் வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் அதன்பின் விலை உயர்ந்தது. தொடர்ந்து பவுன் ரூ. 37 ஆயிரத்துக்கு மேல் இருந்து வருகிறது. நேற்று முன்தினம் பவுனுக்கு ரூ. 400 உயர்ந்து ரூ. 37 ஆயிரத்து 440-க்கு விற்பனையானது.  

இந்த நிலையில் நேற்று தங்கம் விலையில் உயர்வு காணப்பட்டது. சென்னையில் நேற்று காலை ஆபரண தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ. 128 அதிகரித்து ரூ. 37 ஆயிரத்து 568-க்கு விற்பனையானது. 

ஒரு கிராம் தங்கம் ரூ. 4 ஆயிரத்து 696 ஆக இருந்தது.  வெள்ளி கிலோவுக்கு ரூ. 400 குறைந்து ரூ. 61 ஆயிரத்து 200 ஆக இருந்தது. ஒரு கிராம் வெள்ளி ரூ. 61.20-க்கு விற்பனை செய்யப்பட்டது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து