முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வெல்லமண்டி நடராஜன் உள்பட 4 பேர் தலைமைக் கழக நிர்வாகிகளாக நியமனம்: ஓ.பன்னீர் செல்வம் அறிவிப்பு

செவ்வாய்க்கிழமை, 26 ஜூலை 2022      அரசியல்
OPS 2022-07-26

வெல்லமண்டி நடராஜன் உள்பட நான்கு பேரை அதிமுக தலைமைக் கழக நிர்வாகிகளாக நியமித்து ஓ.பன்னீர் செல்வம் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். 

அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி கே. பழனிசாமி ஆகிய இருவருக்குள்ளும் மோதல் ஏற்பட்டதையடுத்து அக்கட்சியில் பல்வேறு குழப்பங்கள் இருந்து வருகின்றன. ஓபிஎஸ் தரப்பு ஆதரவாளர்களை இபிஎஸ் தரப்பு நீக்குவதும், அதுபோல இபிஎஸ் தரப்பு ஆதரவாளர்களை ஓபிஎஸ் தரப்பு நீக்குவதும் என நிகழ்ந்து வருகிறது. 

இந்நிலையில், வெல்லமண்டி நடராஜன் உள்பட நான்கு பேரை அதிமுக தலைமைக் கழக நிர்வாகிகளாக நியமித்து ஓ.பன்னீர் செல்வம் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். 

வெல்லமண்டி நடராஜன் - கழக அமைப்புச் செயலாளர், ஆர்.டி.ராமச்சந்திரன் - கழக புரட்சித் தலைவி பேரவைச் செயலாளர்,சி. திருமாறன் - கழக வழக்கறிஞர் பிரிவுத் தலைவர், ஆர்.வி.பாபு - கழக வழக்கறிஞர் பிரிவுச் செயலாளர், கியோருக்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.  

முன்னதாக, அதிமுக துணை ஒருங்கிணைப்பாளா் பொறுப்பில் இருந்து வைத்திலிங்கம் விடுவிக்கப்பட்டு, இணை ஒருங்கிணைப்பாளராகச் செயல்படுவார் என்றும் துணை ஒருங்கிணைப்பாளா்களாக கு.ப.கிருஷ்ணன், ஜே.சி.டி. பிரபாகா், மனோஜ் பாண்டியன் ஆகியோரை நியமித்து ஓபிஎஸ் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!