முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜோதி விமர்சனம்

சனிக்கிழமை, 30 ஜூலை 2022      சினிமா
Jyoti-Review 2022 07-31

Source: provided

நிறைமாத கர்ப்பிணி மனைவி ஷீலாவை கணவர் சரவணன் அவசர பணி காரணமாக தனியே விட்டுவிட்டு போகிறார். அப்போது டிவியில் வெளியாகும் குழந்தைகள் கடத்தல் செய்தியை பார்த்து பதற்றமாகிறார் ஷீலா. இந்த பதட்டமான சூழ்நிலையில் அவர் வீட்டின் கதவு தட்டப்பட, ஷீலா மயக்கமாக கிடக்க அவரது வயிற்றிலிருந்து ஆபரேஷன் மூலம் குழந்தையை எடுத்து திருடிச் செல்கிறார் ஒருவர் எனத்தொடங்குகிறது படம். ஒரு ஆணின் கோபத்தை விட ஒரு பெண்ணின் அமைதி பேராபத்தானது என்பதுதான் படத்தின் கரு. மருத்துவமனைகளில் இருந்து குழந்தைகளை திருடும் கொடூரம் வாடிக்கையாகி விட்ட இந்த காலத்தில் வயிற்றைக் கிழித்து குழந்தையை திருடும் கும்பலா என பதறிப் போகும் நாயகன் வெற்றி.  இதற்கு காரணமானவர்கள் யார் என்ற துப்பறிவுதான் தான் படத்தின் முழு கதை. படத்தின் கிளைமாக்ஸ் யாரும் எதிர் பாராதது. படத்தின் முக்கிய வேடத்தில் நடித்துள்ள தயாரிப்பாளர் SP ராஜா சேதுபதி படம் பற்றி கூறுகையில், இந்த உண்மை சம்பவத்தை அறியும் போது இதை படமாக்க வேண்டும் என்று தீர்மானித்தேன். திரைப்படக்கல்லூரியில் AV கிருஷ்ண பரமாத்மா இயக்கிய குறும்படத்தை பார்த்தேன். மிகவும் சிறப்பாக இருந்தது. அதனால் இந்த சம்பவத்தை எழுதி இயக்கும் பொறுப்பை அவரிடம் ஒப்படைத்தேன். படம் மிகவும் சிறப்பாக வந்துள்ளது. எந்த குழந்தையிடம் இருந்து, இந்த படத்தை ஆரம்பித்தமோ அந்த குழந்தையை கொண்டுவந்து உங்கள் முன் காட்டுகிறோம் என்றார். இது போன்ற சமூக அக்கறை கொண்ட படத்தினை கொடுத்த தயாரிப்பாளர் SP ராஜா சேதுபதிக்கும் இயக்குனர் கிருஷ்ண பரமாத்மாவுக்கும் நமது பாராட்டுக்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து