முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குலு குலு விமர்சனம்

சனிக்கிழமை, 30 ஜூலை 2022      சினிமா
Gulu-Gulu-Review 2022 07-31

Source: provided

அமேசான் காட்டில் பிறந்து பலமொழிகளைக் கற்று பல்வேறு நாடுகளைக் கடந்து சென்னையில் வசிக்கிறார் கூகுள் குல்லுபாய் சந்தானம். உதவி என்று யாராவது கேட்டால் உடனே ஓடிப்போய் உதவி செய்யும் பழக்கம். இந்நிலையில் தங்கள் நண்பனை ஒரு கூட்டம் கடத்திவிட்டது மீட்டுக் கொடுங்கள் என்று சிலர் இளைஞர்கள் அவரை அணுக, சந்தானமும் புறப்படுகிறார். அதன்பின் என்னவாகிறது? என்பதை செல்லும் படம்தான் குலுகுலு. சந்தானம் இதுவரை ஏற்காத வேடம். எதற்கெடுத்தாலும் எதிர்ப்பேச்சு பேசாத அமைதியான சந்தானம். எவ்வித வேடத்துக்கும் நான் தயார் என்பதை இந்தப்படத்தின் மூலம் சொல்லியிருக்கிறார். கடத்தப்பட்டவரின் நண்பராக வருகிறார் நமீதாகிருஷ்ணமூர்த்தி. இன்னொரு நாயகி அதுல்யாசந்திரா. பிரதீப்ராவத்,பிபின், தீனா உள்ளிட்டோருக்கு வில்லன் வேடம். ஈழத்தமிழர்களாக வரும் ஜார்ஜ்மரியம் டிஎஸ்ஆர் உள்ளிட்டோர் சில இடங்களில் சிரிக்க வைக்கிறார்கள். விஜய்கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு அருமை. சந்தோஷ்நாராயணன் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். பப்ஜி போன்ற மொபைல் விளையாட்டுகளின் ஆபத்தை நகைச்சுவை கலந்து சொல்லியிருக்கிறார் இயக்குனர். காதல், பாசம், உறவுகள் ஆகிய அனைத்தையும் இன்னும் இலகுவான நடையில் சொல்லியிருந்தால்  எல்லோருக்கும் ரசிக்கும்படி இருந்திருக்கும். மொத்தத்தில் குலுகுலு ஒரு வித்தியாசமான முயற்சி. சந்தானத்துக்குப் பலம்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!