முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிபிராஜ் நடிக்கும் வட்டம்

சனிக்கிழமை, 30 ஜூலை 2022      சினிமா
Sibiraj 2022 07-31

Source: provided

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் கமலக்கண்ணன் இயக்கத்தில் சிபி சத்யராஜ் ஆண்ட்ரியா இணைந்து நடிக்கும் படம் வட்டம். டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஒரிஜினல் ஓடிடி தளத்தில் ஜூலை 29 அன்று இப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. வம்சி கிருஷ்ணா, அதுல்யா ரவி, பால சரவணன், சைத்ரா ரெட்டி, நக்கலைட்ஸ் சசி மற்றும் பலர் இப்படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். நிவாஸ் கே பிரசன்னா இசையமைக்க, பி.வி.சங்கர் ஒளிப்பதிவு செய்ய சிவானந்தீஸ்வரன் படத்தொகுப்பைக் கவனிக்கிறார். 24 மணி நேரத்தில் ஒரு இளைஞரின் வாழ்வில் ஏற்படும் மாற்றம் தான் இந்த படத்தின் கதை. இந்த படத்தின் இயக்குனர் கமலக்கண்ணன் மதுபான கடை என்ற படத்தை ஏற்கனவே இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!