முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கடிதம் மூலம் மிரட்டல்: துப்பாக்கி வைத்துக்கொள்ள நடிகர் சல்மான் கானுக்கு அனுமதி

திங்கட்கிழமை, 1 ஆகஸ்ட் 2022      சினிமா
Salman-Khan 2022-08-01

Source: provided

மும்பை : நடிகர் சல்மான் கான் துப்பாக்கி வைத்துக்கொள்ள மும்பை காவல் துறை உரிமம் வழங்கி அனுமதி அளித்துள்ளது.

அண்மையில் சல்மான் கான் மற்றும் அவரது தந்தைக்கு மர்ம நபர் ஒருவரிடமிருந்து கொலை மிரட்டல் கடிதம் வந்தது. அதில், கடந்த மே மாதம் கொல்லப்பட்ட பஞ்சாபி பாடகரான சித்து மூசே வாலாவைப் போல கொல்லப்படுவீர்கள் என குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த மிரட்டலைத் தொடர்ந்து நடிகர் சல்மான் கான், மும்பையின் பாந்திரா காவல் துறையில் புகார் அளித்தார்.

இதையடுத்து, அவரது வீட்டைச் சுற்றி பாதுகாப்பை பலப்படுத்தியது காவல் துறை. மேலும், பொதுவெளியில் சுற்றுவதை குறைக்கவும், சைக்கிளிங் ஓட்டுவதை தவிர்க்கவும் காவல் துறை அறிவுறுத்தியிருந்தது.

இதன்பின், நடிகர் சல்மான் கான் மும்பை காவல் துறையிடம் தற்காப்பிற்காக துப்பாக்கி வைத்துள்ள அனுமதி கோரி விண்ணபித்திருந்தார். இந்நிலையில், அவருக்கு துப்பாக்கி வைத்துக்கொள்வதற்கான உரிமத்தை மும்பை காவல் துறை வழங்கியுள்ளது. நிலையான வழிகாட்டு நெறிமுறைகளுக்குப் பின்னரே அவருக்கு துப்பாக்கிக்கான உரிமம் வழங்கப்பட்டுள்ளது.

"சமீபத்தில் தனக்கு வந்த மிரட்டல் கடிதங்களின் பின்னணியில் தற்காப்புக்காக ஆயுத உரிமம் கோரி விண்ணப்பித்த நடிகர் சல்மான் கானுக்கு ஆயுத உரிமம் வழங்கப்பட்டுள்ளது' 'என மும்பை காவல் துறை தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!