முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

லக்னோ விமான நிலையத்தில் குப்பைத்தொட்டியில் கண்டெடுக்கப்பட்ட ரூ. 36.6 லட்சம் மதிப்புள்ள தங்க கட்டிகள்..!

வியாழக்கிழமை, 4 ஆகஸ்ட் 2022      உலகம்
lakno-airport 2022 08 04

Source: provided

லக்னோ: லக்னோ விமான நிலையத்தில் குப்பைத்தொட்டியில் ரூ. 36.6 லட்சம் மதிப்புள்ள தங்க கட்டிகள் அதிகாரிகளால் கண்டெடுக்கப்பட்டன.

உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள சவுத்ரி சரண் சிங் விமான நிலையத்தில் உள்ள ஒரு குப்பைத் தொட்டியில் தங்க கட்டிகள் கிடப்பதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்று சோதனையிட்ட அதிகாரிகள், குப்பைத் தொட்டியில் இருந்து 6 தங்க கட்டிகளை கைப்பற்றினர். 

அந்த தங்க கட்டிகளின் மதிப்பு சுமார் 36 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த தங்க கட்டிகளை சட்டவிரோதமாக கடத்தி வந்தவர்கள் தான் அவற்றை குப்பைத் தொட்டியில் வீசியிருக்கக் கூடும் என்று தெரிவித்த அதிகாரிகள், இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!