முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குரங்கு அம்மை பரவல் எதிரொலி- சுகாதார அவசரநிலையை அறிவித்தது அமெரிக்கா

வெள்ளிக்கிழமை, 5 ஆகஸ்ட் 2022      உலகம்
Monkey-pox 2022 08 05

குரங்கு அம்மை பரவலை பொது சுகாதார அவசரநிலையாக அறிவித்துள்ளது அமெரிக்கா.

அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட 70 -க்கும் மேற்பட்ட நாடுகளில் குரங்கு அம்மை இப்போது தொற்று பரவி உள்ளது. உலக அளவில் குரங்கு அம்மை நோய் பரவும் விகிதம் அதிகரித்துள்ள சூழலில், அந்நோய்ப் பரவலை சர்வதேச அளவிலான பொது சுகாதார அவசர நிலையாக சமீபத்தில் பிரகடனம் செய்தது உலக சுகாதார நிறுவனம்.

இதேபோல் குரங்கு அம்மை பரவலை தடுக்க அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. முன்னதாக, முதன்முதலாக நியூயார்க், இல்லினாய்ஸ் மாநிலங்களில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டன.

இந்நிலையில், குரங்கு அம்மை பரவலை ஒரு பொது சுகாதார அவசரநிலையாக அறிவித்துள்ளது அமெரிக்கா. குரங்கு அம்மை பரவலை எதிர்த்துப் போராடும் வகையில் கூடுதல் நிதி மற்றும் மருத்துவ சிகிச்சைகளை விரிவுபடுத்தும் பொருட்டு பொது சுகாதார அவசரநிலையாக அறிவிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் சுகாதார செயலாளர் தெரிவித்துள்ளார்.

புதன்கிழமை நிலவரப்படி, அமெரிக்காவில், 6,600 பேர் குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து சுகாதார நடவடிக்கைகளை தீவிரப்படுத்த நாடு முழுவதும் அவசரநிலையாக பிரகடனப்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ராய்டர்ஸ் செய்தி நிறுவனம் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!