முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மன்னிப்பு கோரியது ஓ.பி.எஸ். தரப்பு: அ.தி.மு.க. பொதுக்குழு வழக்கை விசாரிக்க தனி நீதிபதி மறுப்பு

வெள்ளிக்கிழமை, 5 ஆகஸ்ட் 2022      தமிழகம்
OPS 2022-07-26

Source: provided

சென்னை: ஓ.பி.எஸ். தரப்பு மன்னிப்பு கோரிய நிலையில், அ.தி.மு.க. பொதுக்குழு வழக்கை விசாரிக்க மறுத்த தனி நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, வழக்கை தலைமை நீதிபதிக்கு அனுப்பி வைத்தார். வழக்கை எந்த நீதிபதி விசாரிப்பார் என்பதை தலைமை நீதிபதி முடிவு செய்வார் எனக்கூறியுள்ளார்.

அ.தி.மு.க. பொதுக்குழு தொடர்பான வழக்குகளை, வேறு நீதிபதிக்கு மாற்றும்படி, தலைமை நீதிபதிக்கு மனு அனுப்பிய, ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கண்டனம் தெரிவித்தார். பன்னீர்செல்வத்தின் நடவடிக்கை, நீதித் துறையை களங்கப்படுத்துவதாகவும், தரம் குறைவாக இருப்பதாகவும் தனி நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி அதிருப்தி தெரிவித்தார். மேலும், இந்த வழக்கை நேற்று(ஆக.,5) விசாரிப்பதாகவும் தெரிவித்தார்.

இந்நிலையில் நேற்று விசாரணையின் போது, நீதிபதியை மாற்றக்கோரிய விவகாரத்தில் நீதிபதி மீது எந்த குற்றச்சாட்டும் கூறவில்லை எனவும், அ.தி.மு.க. பொதுக்குழு வழக்கு தொடர்பாக தங்கள் முன் வாதிட விரும்புவதாகவும் கூறி, ஓ.பி.எஸ் தரப்பு மன்னிப்பு கோரியது. இதனையடுத்து நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, தலைமை நீதிபதியிடம் அளிக்கப்பட்ட கடிதத்தை திரும்ப பெறுங்கள். மன்னிப்புக் கோரியது உட்பட தன்னிடம் கூறிய அனைத்தையும் மனுவாக தாக்க செய்ய வேண்டும் என உத்தரவிட்டது.

அதற்கு ஓ.பி.எஸ். தரப்பு வழக்கறிஞர், தலைமை நீதிபதியிடம் அளிக்கப்பட்ட கடிதத்தை திரும்ப பெறுவது குறித்து ஓ.பி.எஸ். தரப்பில் கேட்டு சொல்வதாக கூறினார். இதனையடுத்து அ.தி.மு.க. பொதுக்குழு தொடர்பான வழக்குகளை நீதிபதி சற்று நேரத்திற்கு ஒத்திவைத்தார். சிறிது நேரத்திற்கு பிறகு துவங்கிய விசாரணையின்போது, மன்னிப்பு கோரி மனு தாக்கல் செய்ய முடியாது' என ஓ.பி.எஸ். தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 

பின்னர் நீதிபதி கூறுகையில், 2 நாட்களுக்கு முன் என்னிடம் முறையிட்டிருந்தால், நானே விலகியிருப்பேன். அதை விடுத்து தலைமை நீதிபதியிடம் முறையிட்டுள்ளீர்கள்' எனக்கூறி வழக்கை மாலை 4:30க்கு ஒத்திவைத்தார். மாலை 4: 30 மணிக்கு வழக்கு விசாரணைக்கு வந்த போது, பொதுக்குழு வழக்கில் இருந்து விலகுவதாக அறிவித்த நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, இந்த வழக்கை எந்த நீதிபதி விசாரிப்பார் என்பதை தலைமை நீதிபதி முடிவு செய்வார் எனக்கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!