முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜனாதிபதி முர்மு, பிரதமர் மோடியுடன் மேற்கு வங்க முதல்வர் மம்தா சந்திப்பு

வெள்ளிக்கிழமை, 5 ஆகஸ்ட் 2022      இந்தியா
mnamta----------2022-08-05

Source: provided

புதுடெல்லி: டெல்லியில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் மோடியை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று சந்தித்தார்.

டெல்லியில் ஆகஸ்ட் 7-ம் தேதி நடைபெறும் நிதி ஆயோக் நிர்வாக குழு கூட்டத்தில் பங்கேற்க மேற்குவங்க முதல் மந்திரி மம்தா பானர்ஜி நேற்று முன்தினம் டெல்லி சென்றார். இந்நிலையில், நேற்று அவர் டெல்லியில் பிரதமர் மோடியை நேரில் சென்று சந்தித்தார்.

இந்த சந்திப்பின் போது, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம், மாநிலங்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஜி.எஸ்.டி. நிலுவைத் தொகை உள்ளிட்ட பல விவகாரங்கள் குறித்து பேசப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை தொடர்ந்து மம்தா பானர்ஜி நேற்று மாலை ஜனாதிபதி திரவுபதி முர்முவை சந்தித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!