முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

என்.எல்.சி. பணியாளர் தேர்வு விவகாரத்தில் பிரதமர் மோடி தலையிட்டு தமிழர்களுக்கு சாதகமான முடிவை எடுக்க வேண்டும் முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம் மூலம் மீண்டும் வலியுறுத்தல்

வெள்ளிக்கிழமை, 5 ஆகஸ்ட் 2022      தமிழகம்
Stelin 2022 02 23

Source: provided

சென்னை: என்.எல்.சியில் தமிழகத்தைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு பயிற்சிப் பட்டதாரி பொறியாளர் பணிக்குத் தேர்வு செய்வதில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையில் அழுத்தமான நியாயம் இருப்பதால், இந்த விஷயத்தில் பிரதமர் தலையிட்டு விரைவில் சாதகமானதாக முடிவு எடுக்க வேண்டும்" என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

நியமிக்கக்கூடாது... 

அந்தக் கடிதத்தில், தமிழகத்தில் உள்ள இந்திய அரசின் நவரத்னா பொதுத்துறை நிறுவனமான என்.எல்.சி திட்டங்கள் மற்றும் சுரங்கங்களுக்கு நிலம் வழங்கிய குடும்பங்களைச் சேர்ந்த உள்ளூர் விண்ணப்பதாரர்களுக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கும் வகையில் சிறப்புத் தேர்வின் மூலம் நியமிக்கப்பட வேண்டும். கேட் (GATE) தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பயிற்சிப் பட்டதாரி பொறியாளர்களை நியமிக்கக் கூடாது எனவும் உத்தரவிட வேண்டும் என்று 2022 ஆம் ஆண்டு மே மாதம் 5 ஆம் தேதி, தான் ஏற்கெனவே எழுதிய கடிதத்தில் கேட்டுக்கொண்டதை வலியுறுத்தியுள்ளார்.

பிரதமர் தலையிட...

தமிழகத்தைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு பயிற்சிப் பட்டதாரி பொறியாளர் பணிக்குத் தேர்வு செய்வதில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையில் அழுத்தமான நியாயம் இருப்பதால், இந்த விஷயத்தில் பிரதமர் தலையிட்டு விரைவில் சாதகமானதாக முடிவு எடுக்க வேண்டும் என்றும் அந்தக் கடிதத்தில் முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!