முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்திய கிரிக்கெட் வீரர்கள் ப்ளோரிடாவில் ஜாலி ட்ரிப்

வெள்ளிக்கிழமை, 5 ஆகஸ்ட் 2022      விளையாட்டு
cricket-team--------2022-08-05

Source: provided

வெஸ்ட் இண்டீஸ் - இந்தியா அணிகளுக்கிடையேயான 4-வது டி20 போட்டி புளோரிடாவில் இன்று நடைபெறுகிறது. இந்த மைதானத்தில் இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் நேருக்கு நேர் நான்கு முறை சந்தித்துள்ளன. இதில் இந்தியா 2-1 என முன்னிலை வகிக்கிறது. 4-வது டி20 போட்டி இன்று நடக்கவுள்ள நிலையில் இந்திய கிரிக்கெட் வீரர்கள் புளோரிடாவில் உள்ள மியாமி கடற்கரையை சுற்றிப் பார்க்க முடிவு செய்தனர். 

அதன்படி இந்திய வீரர்களான ஹர்திக் பாண்டியா, ஸ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ் உள்பட குழு உறுப்பினர்கள் கடற்கரையில் கிட்டத்தட்ட 3 மணிநேரம் செலவிட்டனர். அந்த புகைப்படத்தை அவர்கள் தங்களது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்தனர். இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

_____________

தமிழக வீரர் அஸ்வினை

பாராட்டும் மஞ்ச்ரேக்கர்

இந்திய டி20 அணியில் அஸ்வின் விளையாடுவது பற்றி முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கூறியதாவது., மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டி20 தொடருக்கு அஸ்வினைத் தேர்வு செய்தது அபாரம். கடந்த சில வருடங்களாக டி20 லீக்குகளில் அஸ்வின் நன்றாக விளையாடி வருகிறார். சஹாலுடன் இணைந்து பந்துவீசும்போது அஸ்வினை எனக்குப் பிடிக்கிறது. டி20 கிரிக்கெட்டில் நடு ஓவர்களில் சுழற்பந்து வீச்சாளர்களின் வேலையே விக்கெட்டுகளை எடுப்பது தான், தென்னாப்பிரிக்காவுக்காக ஷம்சி, மஹாராஜ் அதைச் செய்கிறார்கள். 

ஒரு டி20 சுழற்பந்து வீச்சாளராக இந்த விஷயத்தில் தான் அஸ்வின் சற்று பின்தங்குகிறார். அவர் ரன்களைக் கட்டுப்படுத்துவதில் கவனம் செலுத்துகிறார். சஹால் அல்லது விக்கெட் எடுக்கும் இன்னொரு சுழற்பந்து வீச்சாளர் அணியில் இருந்தால் அஸ்வின் நல்ல தேர்வாக இருப்பார். ஏனெனில் டி20 கிரிக்கெட்டில் குறைவாக ரன்கள் கொடுப்பதில் தேர்ச்சியடைந்துள்ளார் அஸ்வின். டி20 உலகக் கோப்பை அணியில் சஹால் நிச்சயம் இருப்பார். என்றார். 

_____________

இந்தியாவை தோற்கடிப்போம்:

முன்னாள் பாக். வீரர் நம்பிக்கை

ஆஸ்திரேலியாவில் வரும் அக்டோபர் மாதம் நடைபெறும் ஐசிசி டி20 உலக கோப்பை 2022 தொடரில் சாம்பியன் பட்டத்தை வெல்வதற்கு உலகின் அனைத்து அணிகளும் பல்வேறு இருதரப்பு டி20 தொடர்களில் பங்கேற்று வருகின்றன. அந்த வரிசையில் கடந்த முறை விராட் கோலி தலைமையில் நாக்-அவுட் சுற்றுக்கு கூட தகுதி பெற முடியாமல் வெளியேறிய இந்தியா இம்முறை ரோகித் சர்மா தலைமையில் களமிறங்க தயாராகி வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஐபிஎல் 2022 தொடருக்கு பின் தென்னாப்பிரிக்கா, அயர்லாந்து, இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஆகிய அணிகளுக்கு எதிராக அடுத்தடுத்த டி20 தொடர்களில் இந்திய அணி விளையாடியது.

இந்நிலையில் கடந்த 2021 டி20 உலக கோப்பையில் தவறுகளைச் செய்த இந்தியாவை தோற்கடித்தது போல் இம்முறையும் தேவையற்ற கேப்டன்ஷிப் மாற்றம், அணிகள் நிகழும் தேவையற்ற வீரர்கள் மாற்றம் போன்ற குளறுபடிகளை பயன்படுத்தி பாகிஸ்தான் மீண்டும் வெற்றி பெறும் என்று அந்நாட்டை சேர்ந்த முன்னாள் வீரர் ரசித் லதீப் உறுதியாக தெரிவித்துள்ளார்.

______________

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து