முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உறவினர் வீடு என தெரியாமல் தீயை அணைக்க சென்ற தீயணைப்பு வீரர், 2 குழந்தைகள் உள்பட 10 பேர் பலி

சனிக்கிழமை, 6 ஆகஸ்ட் 2022      உலகம்
Pennsylvania 2022-08-06

Source: provided

பென்சில்வேனியா : அமெரிக்காவில் எரிவது தனது உறவினர் வீடு என தெரியாமல் தீயை அணைக்க விரைந்து சென்ற தீயணைப்பு வீரர் ஒருவர் கண்முன்னே தன்னுடைய 2 குழந்தைகள், மாமனார் உள்ளிட்ட 10 உறவினர்கள் உடல் கருகி உயிரிழந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.  இந்த துயரமான சம்பவம் அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் நிகழ்ந்துள்ளது. 

நெஸ்கோபேக் என்ற இடத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவு 2 மணிக்கு திடீரென ஒரு வீடு முழுவதும் தீ பிடித்தது. வீட்டுக்குள் இருந்தவர்களின் அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர், உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கு புகார் அளித்தனர். விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க முயன்றனர். 

தீயணைப்பு வாகனத்தை ஓட்டிவந்த ஹரோல்டு பேக்கர் என்பவர் எரிந்து கொண்டிருப்பது தனது உறவினரின் வீடு தான் என்பதை அறிந்து அதிர்ச்சியில் உறைந்து நின்றார். ஹரோல்டு பேக்கரின் மாமனார் தனது பிள்ளைகளோடு கூட்டு குடும்பமாக வசித்த வீட்டிலேயே தீ பற்றி எரிந்துள்ளது. தீயில் சிக்கி 10 பேர் இறந்து விட்டனர். இது குறித்து கூறிய பேக்கர், அவர்களை எங்களால் காப்பாற்ற முடியவில்லை. என்மீது விழுந்த மிகப்பெரிய தவறாக நான் பார்க்கிறேன். நான் உள்ளே சென்று அவர்களை காப்பாற்ற முடியவில்லை. நாங்கள் வந்தோம். அவற்றை இழந்தோம். ஆனால் மொத்த வீடும் எரிந்து கொண்டிருந்தது என்று வருத்தத்துடன் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!