முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கர்நாடக முதல்வர் விரைவில் குணமடைய விரும்புகிறேன் : முதல்வர் ஸ்டாலின் டுவிட்டரில் பதிவு

சனிக்கிழமை, 6 ஆகஸ்ட் 2022      தமிழகம்
Stalin 2020 07-18

Source: provided

சென்னை : கொரோனா தொற்றில் இருந்து கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை விரைவில் குணமடைய விரும்புகிறேன் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

நாட்டில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. பிரபலங்கள் பலரும் தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர்.  இந்நிலையில், கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.   இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், 

லேசான அறிகுறிகளுடன் எனக்கு தொற்று உறுதியாகியுள்ளது. வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். கடந்த சில நாட்களாக என்னுடன் தொடர்பு கொண்டவர்கள், தனிமைப்படுத்தி பரிசோதித்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். எனது டெல்லி பயணமும் ரத்து செய்யப்படுகிறது என்று பதிவிட்டுள்ளார். 

இந்த நிலையில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில்,  கர்நாடக முதல்வர் பசவராஜ் எஸ். பொம்மை கொரோனா தொற்றிலிருந்து விரைந்து குணமடைய விழைகிறேன் என்று பதிவிட்டுள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!