முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கருணாநிதி நினைவு நாள்: கேரள முதல்வர் பினராய் தமிழில் டுவீட்

ஞாயிற்றுக்கிழமை, 7 ஆகஸ்ட் 2022      தமிழகம்
Pinarayi-Vijayan 2022-08-07

Source: provided

சென்னை : முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவு தினத்தையொட்டி கேரள முதல்வர் பினராய் விஜயன் டுவிட்டரில் மரியாதை செலுத்தியுள்ளார். 

தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 4-ம் ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி சென்னை மெரினாவில் உள்ள கருணாநிதி நினைவிடத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர் வளையம் வைத்தும் மலர் தூவியும் மரியாதை செலுத்தினார். 

இந்த நிலையில், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவு தினத்தையொட்டி கேரள முதல்வர் பினராய் விஜயன் டுவிட்டரில் அஞ்சலி செலுத்தியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், திராவிட அரசியலிலும், கூட்டாட்சி தத்துவத்தை பாதுகாப்பதிலும் கலைஞர் ஆற்றிய பங்களிப்புகள் இணையற்றது.

அவரது நினைவு நாளில் எனது புகழஞ்சலியை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் தெரிவித்துக் கொள்கிறேன். கலைஞரின் வாழ்வும் நினைவும் இந்திய அரசியலமைப்பைப் பாதுகாக்க அனைவரையும் ஊக்குவிக்கும் என்று அந்த பதிவில் பினராய் விஜயன் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து