முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முல்லைப் பெரியாறில் 142 அடி வரை தண்ணீர் தேக்க ஓ.பி.எஸ். வலியுறுத்தல்

ஞாயிற்றுக்கிழமை, 7 ஆகஸ்ட் 2022      தமிழகம்
OPS 2022-07-26

Source: provided

சென்னை ; முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி வரை தண்ணீர் தேக்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் பலமுறை முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி வரை நீர் தேக்கப்பட்டு வந்தது. ஆனால் கடந்த ஓராண்டு கால தி.மு.க. ஆட்சியில் இந்த முறை பின்பற்றப்படவில்லை. தற்போது, மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் நீர்பிடிப்புப்பகுதிகளில் பெய்த தொடர் மழையின் காரணமாக முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 137.50 அடியை எட்டியது. இதையடுத்து கேரள முதல்வர் எழுதிய கடிதத்தை தொடர்ந்து தமிழக அரசு, முல்லைப் பெரியாறு அணையிலிருந்து வினாடிக்கு 534 கன அடி நீரை கேரள பகுதிக்கு திறந்து விட்டுள்ளதாக செய்திகள் வந்துள்ளன. 

மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள், முல்லைப்பெரியாறு அணையில் 142 வரை நீரை தேக்காததற்கு ரூல் கர்வ் என்ற விதி தான் காரணம் என்று கூறுகின்றனர்

. இதற்கு விவசாய சங்கங்களும் கண்டனத்தை தெரிவித்துள்ளன. எனவே, முதல்வர் இதில் உடனடியாக தலையிட்டு ரூல் கர்வ் விதியை ரத்து செய்யவும் ரூல் கர்வ் விதி குறித்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனை எதிர்த்து அ.தி.மு.க.வின் சார்பில் மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். இவ்வாறு அந்த அறிக்கையில் ஓ.பி.எஸ். தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து