முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்திய ராணுவத்தில் 5ஜி சேவை பயன்படுத்த திட்டம்

ஞாயிற்றுக்கிழமை, 7 ஆகஸ்ட் 2022      இந்தியா
5G-service 2022-08-07

Source: provided

புதுடெல்லி : எல்லையில் பகுதிகளில் தகவல் தொடர்புக்கு 5ஜி சேவையைப் பயன்படுத்த ,இந்திய ராணுவம் திட்டமிட்டுள்ளது. 

நாட்டில் தற்போது 4ஜி அலைக்கற்றை பயன்பாட்டில் இருக்கும் நிலையில் விரைவில் 5ஜி அலைக்கற்றை அறிமுகமாக உள்ளது. இதற்கான ஏலம் ஜூலை 26-ம் தேதி தொடங்கி கடந்த 1-ம் தேதி ஏலம் நிறைவடைந்தது.

இதில், 72,098 மெகாஹெர்ட்ஸில் 51,236 மெகாஹெர்ட்ஸ் (71 சதவீதம்) மட்டுமே ரூ. 1 லட்சத்து 50 ஆயிரத்து 173 கோடிக்கு விற்பனையானதாக மத்திய தொலைத் தொடர்பு துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்திருந்தார். செப்டம்பர் - அக்டோபர் மாதத்திற்குள் 5ஜி சேவைகள் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்த நிலையில் , 5ஜி தொழில்நுட்பம் பயன்பாட்டுக்கு வரும் போது, அதை எல்லையில் உள்ள படையினரின் தகவல் தொடர்புக்கு பயன்படுத்த இந்திய ராணுவம் திட்டமிட்டுள்ளது. பாதுகாப்பு படைகளில் 5ஜி தொழில்நுட்பத்தை அமல்படுத்துவது தொடர்பாக சமீபத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இந்த ஆய்வின் பரிந்துரைகளை ராணுவம், கடற்படை, விமானப்படை ஆகியவை பரிசீலித்து வருகின்றன. எல்லைப் பகுதிகளில் உள்ள படையினருடன் முக்கியமான தகவல் தொடர்புக்கு 5ஜி தொழில்நுட்பம் சிறப்பாக இருக்கும் என இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து