முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெல்லியில் நிதி ஆயோக் 7-வது நிர்வாக கவுன்சில் கூட்டம் : பிரதமர் மோடி தலைமையில் நடந்தது

ஞாயிற்றுக்கிழமை, 7 ஆகஸ்ட் 2022      இந்தியா
Modi 2022-08-07

Source: provided

புது டெல்லி : பிரதமர் மோடி தலைமையில் நேற்று நிதி ஆயோக்கின் ஏழாவது நிர்வாக கவுன்சில் கூட்டம் டெல்லியில் நடந்தது. இக்கூட்டத்தில் மாநில முதல்வர்கள் பங்கேற்றனர். 

டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையின் கலாசார மையத்தில் நேற்று நிதி ஆயோக்கின் 7-வது நிர்வாக கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. பிரதமர் மோடி தலைமையில் நடந்த இக்கூட்டத்தில், மாநில முதல்வர்கள், துணைநிலை ஆளுநர்கள், அலுவல் சார்ந்த உறுப்பினர்கள், நிதி ஆயோகின்  துணைத் தலைவர், முழுநேர உறுப்பினர்கள், ஒன்றிய அமைச்சர்கள், சிறப்பு  அழைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

கடந்த 2019-ம் ஆண்டு ஜூலை மாதத்திற்கு பின் முதல் முறையாக இந்த  கூட்டம் நேரடியாக நடைபெற்றது. ஏற்கனவே நடந்த கூட்டங்களானது கொரோனா பரவல் காரணமாக காணொலி மூலம் நடந்தன. நேற்று நடந்த கூட்டத்தில் வேளாண் துறையில் தன்னிறைவை எட்டுதல், மாற்றுப்பயிர்கள், எண்ணெய் வித்துக்கள், பருப்பு வகைகள் மற்றும் தேசிய கல்விக் கொள்கை அமலாக்கம், நகர்ப்புற நிர்வாகம் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது.

இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில்,  மாநில வளர்ச்சிகள் குறித்தும், கூட்டாட்சி அடிப்படையில் சுயசார்பு  திட்டங்களை ஊக்குவித்தல் போன்றவை குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. அடுத்த  ஆண்டு ஜி - 20 நாடுகளின் தலைவர் பதவி மற்றும் உச்சிமாநாட்டை இந்தியா  நடத்துவதால், இன்றைய கூட்டம் மிகவும் முக்கியமானது என்று பிரதமர் அலுவலகம்  தெரிவித்துள்ளது. 

இக்கூட்டத்தில் மாநில அளவில் முதல்வர்கள் மட்டுமே பங்கேற்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டதால், சில காரணங்களுக்காக தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ், பீகார் முதல்வர் நிதிஷ் குமார் உள்ளிட்ட சில மாநில முதல்வர்கள் பங்கேற்கவில்லை. அதே நேரம் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பா.ஜ.க. ஆளும் மாநில முதல்வர்கள், கூட்டணி கட்சி ஆளும் மாநில முதல்வர்கள், எதிர்கட்சிகள் ஆளும் மாநில முதல்வர்கள் பங்கேற்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தாய்ப்பால் பெருக | குழந்தை பிறப்பதற்கு முன்னும்,பிறந்த பின்னும் | தாய்ப்பால் கட்டிக்கொண்டு வலித்தல் தீர இளமை சுறுசுறுப்புடன் வாழுவதற்கு | உடல் உஷ்ணத்தை தணிக்க | முதுமை அடைவதை தடுத்து, உடல் பலம் பெற | உடல் பலவீனம் நீங்க சர்க்கரை நோயினால் ஏற்படும் எரிச்சல், பாத எரிச்சல் - கை கால் எரிச்சல் குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள்
கட்டிகள் கரைய, குணமாக, அடிபட்ட வீக்கம், காயங்களுக்கு, நரம்பு சிலந்தி, சிலந்தி புண், வீக்கம் ஆற சித்த மருத்துவ குறிப்புக்கள் மஞ்சள் காமாலை குணமாக | கல்லிரல் குறைபாடு நீங்க | இரத்தம் தூய்மையாக | பாண்டு தீர - சித்த மருத்துவ குறிப்புக்கள் பித்த நோய்கள் குணமாக | பித்த மயக்கம் தீர | பித்த நீர் மலத்துடன் வெளியேற | உடல் உஷ்ணத்தை தணிக்க | கல்லடைப்பு
View all comments

வாசகர் கருத்து