முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

செஞ்சி பட இசை வெளியீடு

திங்கட்கிழமை, 8 ஆகஸ்ட் 2022      சினிமா
Senchi-Film-Music 2022-08-0

Source: provided

அறிமுக இயக்குனர் கணேஷ் சந்திரசேகர் இயக்கி, நடித்து தயாரித்துள்ள படம் செஞ்சி. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. விழாவில் இயக்குநர்கள் கே. பாக்யராஜ், பேரரசு, தயாரிப்பாளர் கே. ராஜன் உள்ளிட்ட திரையுலகப் பிரமுகர்கள் கலந்து கொண்டு பாடல்களை வெளியிட்டார்கள். இந்த விழாவில் இயக்குநர் கே. பாக்யராஜ் பேசுகையில், இவர் யாரிடமும் உதவி இயக்குநராக இல்லை என்றார்கள். இயக்குனர் கணேஷ் சந்திரசேகர் ஒரு சுயம்புவாக வந்திருக்கிறார்.அதே நேரத்தில் குடும்பத்தின்  தேவை அனைத்தையும் செட்டில் செய்துவிட்டு இங்கு படம் எடுக்க வந்திருக்கிறார். இப்படிக் குடும்பத்தில் செட்டில் செய்துவிட்டுத்தான்  சினிமாவுக்கு வர முடியும் என்று   நினைத்தால் இங்கு யாருமே வரவே முடியாது. இங்கே தயாரிப்பாளர் கணேஷ் சந்திரசேகர் சினிமாவில் நுழைவது என்று முடிவெடுத்தபோது அவர் மைத்துனர் கவலைப்பட்டதாக இங்கு பேசும்போது கூறினார். தனது தங்கையின் கணவர் இப்படி சினிமா என்று போவதில் பதற்றப்பட்டதாகச் சொன்னார். ஆயிரம் இருந்தாலும் தனது தங்கையின் வாழ்க்கை மீது அண்ணனுக்கு ஒரு அக்கறை இருக்கும் தானே? மலையேறப் போனாலும் மச்சான் துணை வேணும் என்பார்கள். அந்த வகையில் கவலைப்பட்டு இருக்கிறார். இனி அவர்கள் தைரியமாக இருக்கலாம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

சர்க்கரை நோயினால் ஏற்படும் எரிச்சல், பாத எரிச்சல் - கை கால் எரிச்சல் குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் கட்டிகள் கரைய, குணமாக, அடிபட்ட வீக்கம், காயங்களுக்கு, நரம்பு சிலந்தி, சிலந்தி புண், வீக்கம் ஆற சித்த மருத்துவ குறிப்புக்கள் மஞ்சள் காமாலை குணமாக | கல்லிரல் குறைபாடு நீங்க | இரத்தம் தூய்மையாக | பாண்டு தீர - சித்த மருத்துவ குறிப்புக்கள்
பித்த நோய்கள் குணமாக | பித்த மயக்கம் தீர | பித்த நீர் மலத்துடன் வெளியேற | உடல் உஷ்ணத்தை தணிக்க | கல்லடைப்பு முகப்பரு குணமாக | தழும்புகள், கரும்புள்ளி, பாலுண்ணி நீங்க | மருவு கரப்பான் பிளவை தீர சித்த மருத்துவ குறிப்புக்கள் மூட்டு வலி குணமாக | Natural Home Remedy for Knee & Hip Joint Pain | Arthritis
View all comments

வாசகர் கருத்து