முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எண்ணித்துணிக விமர்சனம்

திங்கட்கிழமை, 8 ஆகஸ்ட் 2022      சினிமா
Numerical-review 2022-08-08

Source: provided

ஜெய், அதுல்யா ரவி, சாம் சுரேஷ், வம்சி கிருஷ்ணா ஆகியோரின் நடிப்பில் எஸ் கே வெற்றிச்செல்வன் இயக்கத்தில் சமீபத்தில் திரைக்கு வந்துள்ள படம் எண்ணித் துணிக. கதை, படத்தில் வில்லன் சாம் சுரேஷுக்கு 2000 கோடி ரூபாய் வைரத்தை கொள்ளையடித்துக் கொடுக்க வேண்டிய வேலை வம்சி கிருஷ்ணாவுக்கு உள்ளது. இதனால் வம்சி கிருஷ்ணா நான்கு பேர் உதவியுடன் கொள்ளையடிக்கிறார். ஆளுக்கு 10 லட்சம் ரூபாய் தங்க நகைகளை பங்கு போட்டுக் கொள்ளுங்கள் ஆனால் 2000 கோடி மதிப்புள்ள வைரம் எனக்கு வேண்டும் என டீல் பேசுகிறார். அரசியல்வாதி சுனில் செட்டிக்கும் தொடர்புள்ள இந்த கடத்தலை ஜெய் போலீஸ் அதிகாரியுடன் சேர்ந்து ஜெய் எப்படி முறியடிக்கிறார்? எதற்காக இந்த கடத்தல் என்பது தான் படத்தின் கதைக்களம். நடிகர் ஜெய் இதுவரை இல்லாத அளவிற்கு செம மாஸான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். வம்சி கிருஷ்ணா, சாம் சுரேஷ் என படத்தில் நடித்துள்ள அனைவரும் சிறந்த நடிப்பை கொடுத்துள்ளனர். அதுல்யா தனது அழகான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். இந்த படத்தில் தினேஷ்குமாரின் ஒளிப்பதிவு காட்சிகளுக்கு உயிர் கொடுக்க சாம் சி எஸ் இசை பலம் சேர்த்துள்ளது. இயக்குனர் வெற்றிச்செல்வன் சிறந்த கதையை தேர்வு செய்து திறம்பட இயக்கி உள்ளார். நிச்சயம் திரையுலகில் அவருக்கு பெரிய இடம் காத்திருக்கிறது என நம்பலாம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து