முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வங்காளதேசத்தில் பெட்ரோல்-டீசல் விலை 50 சதவீதம் உயர்வு : பொதுமக்கள் போராட்டம்

திங்கட்கிழமை, 8 ஆகஸ்ட் 2022      உலகம்
Petrol-Diesel 2022-08-08

Source: provided

டாக்கா : வங்காளதேச அரசு கடந்த 5-ந்தேதி எரிபொருள் விலையை வரலாறு காணாத அளவுக்கு கடுமையாக உயர்த்தியது. இதில் பெட்ரோல் விலை 51.7 சதவீதம் அதிகரித்தது. டீசல் விலையும் 50 சதவீதத்துக்கு மேல் அதிகரித்தது. மேலும் கியாஸ் விலையும் அதிகரித்துள்ளது.

1971-ம் ஆண்டு வங்காள தேசம் சுதந்திரம் அடைந்த பிறகு இதுவரை இல்லாத அளவுக்கு இப்போது எரி பொருள் விலை உயர்ந்துள்ளது.

பெட்ரோல்-டீசல் விலை உயர்ந்துள்ளதால் பொது மக்கள் பெட்ரோல் விற்பனை நிலையங்களை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகிறார்கள். பெட்ரோல்-டீசல் விலை உயர்வு காரணமாக பஸ் கட்டணம் உயர்ந்துள்ளது. மேலும் விலைவாசியும் அதிகரித்துவிட்டது. இதனால் பொதுமக்கள் திண்டாடி வருகிறார்கள்.

விலை உயர்வு கடந்த 6-ந்தேதி அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டது. இதனால் கடந்த 5-ந்தேதி இரவு பெட்ரோல் விற்பனை நிலையங்களில் கூட்டம் அதிகரித்தது. இதனால் நெரிசல் ஏற்பட்டது.

வங்காளதேச பெட்ரோல் கார்ப்பரேஷன் நிறுவனம் கடந்த பிப்ரவரி மாதம் முதல் ஜூலை மாதம் வரை பெட்ரோல்-டீசலை குறைவான விலைக்கு விற்றதாகவும், இதனால் நஷ்டம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. அதனை ஈடுகட்ட தற்போது பெட்ரோல்-டீசல் விலை உயர்த்தப்பட்டு இருப்பதாக தெரிவித்து உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து