முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகம் முழுவதும் எத்தனை பள்ளிகளில் மைதானங்கள், உள்கட்டமைப்பு வசதிகள் உள்ளன ? அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட் உத்தரவு

திங்கட்கிழமை, 8 ஆகஸ்ட் 2022      தமிழகம்
Chennai-High-Court 2021 3

தமிழகம் முழுவதும் எத்தனைப் பள்ளிகளில் விளையாட்டு மைதானங்களும், உள்கட்டமைப்பு வசதிகளும் உள்ளன என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதுரை திருப்பரங்குன்றத்தைச் சேர்ந்த மருத்துவர் சுபாஷ் சந்திரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொது நல மனுவில், "தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் தகுந்த உள்கட்டமைப்பு வசதிகளுடன் உடற்கல்வி வழங்கும் வகையில் விதிகளை வகுக்க வேண்டும்.

உடற்கல்வி என்பது மாணவர்களின் மேம்பாட்டுக்கு முக்கியமானது. தமிழகத்தில் எத்தனைப் பள்ளிகளில் கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் உள்ளன, எத்தனை பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்கள் உள்ளனர் என்பன உள்ளிட்ட விவரங்களை வழங்கக் கோரி தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் விண்ணப்பித்ததேன். ஆனால், இந்த தகவல்களை வழங்க பொது தகவல் அதிகாரி மறுத்துவிட்டார்" என்று மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி மாலா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், "தமிழகம் முழுவதும் எத்தனை பள்ளிகளில் விளையாட்டு மைதானங்களும், உள்கட்டமைப்பு வசதிகளும் உள்ளன என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஆகஸ்ட் 27-ம் தேதிக்கு தள்ளிவைத்தது" உத்தரவிட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தாய்ப்பால் பெருக | குழந்தை பிறப்பதற்கு முன்னும்,பிறந்த பின்னும் | தாய்ப்பால் கட்டிக்கொண்டு வலித்தல் தீர இளமை சுறுசுறுப்புடன் வாழுவதற்கு | உடல் உஷ்ணத்தை தணிக்க | முதுமை அடைவதை தடுத்து, உடல் பலம் பெற | உடல் பலவீனம் நீங்க சர்க்கரை நோயினால் ஏற்படும் எரிச்சல், பாத எரிச்சல் - கை கால் எரிச்சல் குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள்
கட்டிகள் கரைய, குணமாக, அடிபட்ட வீக்கம், காயங்களுக்கு, நரம்பு சிலந்தி, சிலந்தி புண், வீக்கம் ஆற சித்த மருத்துவ குறிப்புக்கள் மஞ்சள் காமாலை குணமாக | கல்லிரல் குறைபாடு நீங்க | இரத்தம் தூய்மையாக | பாண்டு தீர - சித்த மருத்துவ குறிப்புக்கள் பித்த நோய்கள் குணமாக | பித்த மயக்கம் தீர | பித்த நீர் மலத்துடன் வெளியேற | உடல் உஷ்ணத்தை தணிக்க | கல்லடைப்பு
View all comments

வாசகர் கருத்து