முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பொதுப்பிரிவு கலந்தாய்வு தொடக்கம்: மாநிலக் கல்லூரியில் சேர கடும் போட்டி

திங்கட்கிழமை, 8 ஆகஸ்ட் 2022      தமிழகம்
Science-College 2022-08-08

தமிழகத்தில் உள்ள அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் பொதுப் பிரிவு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நேற்று தொடங்கி நடைபெற்றது. இதில் மாநிலக் கல்லூரியில் சேர கடும் போட்டி நிலவியது.

தமிழகத்தில் மொத்தம் 163 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் இளநிலை பட்டப் படிப்புகளில் 1.3 லட்சத்துக்கும் மேற்பட்ட இடங்கள் உள்ளன. இதற்கான மாணவர் சேர்க்கை இணையவழியில் நடத்தப்பட்டது.

அதன்படி, விண்ணப்பப் பதிவு கடந்த ஜூன் 20 முதல் ஜூலை 27-ம் தேதி வரை நடைபெற்றது. மொத்தம் 4 லட்சத்து 7,045 மாணவர்கள் சேர்க்கைக்கு பதிவு செய்தனர். கடந்த ஆண்டைக் காட்டிலும் கூடுதலாக 70 ஆயிரம் பேர் வரை கலை, அறிவியல் படிப்புகளில் சேர விண்ணப்பித்தனர்.

அதில் 3 லட்சத்து 34,765 பேர் முழுமையாக விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்து, 2 லட்சத்து 98,056 பேர் விண்ணப்பக் கட்டணம் செலுத்தினர். விண்ணப்பங்களை முழுமையாக பூர்த்தி செய்து, கட்டணம் செலுத்தியவர்களின் விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு கல்லூரி அளவிலான தரவரிசைப் பட்டியல் 3 ஆம் தேதி வெளியிடப்பட்டது.

இந்தக் கலந்தாய்வு தரவரிசை பட்டியல் அடிப்படையில் கடந்த 5ம் தேதி தொடங்கியது. இதில் சிறப்பு விளையாட்டு, முன்னாள் ராணுவத்தினர் உள்ளிட்ட சிறப்பு பிரிவினருக்கு கலந்தாய்வு நடைபெற்றது. இந்நிலையில் நேற்று முதல் பொதுப்பிரிவு கலந்தாய்வு தொடங்கி உள்ளது.

குறிப்பாக சென்னையில் உள்ள மாநிலக் கல்லூரி சேர கடும் போட்டி நிலவி வருகிறது. மொத்தம் 1000 இடத்திற்கு 1 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். அண்மையில் வெளியான என்ஐஆர்எஃப் தரவரிசைப் பட்டியலில் தமிழகத்தின் 3 கல்லூரிகள் டாப் 10 பட்டியலில் மாநிலக் கல்லூரி இடம் பெற்றிருந்தது. இந்நிலையில் மாநிலக் கல்லூரியில் சேர மாணவர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தாய்ப்பால் பெருக | குழந்தை பிறப்பதற்கு முன்னும்,பிறந்த பின்னும் | தாய்ப்பால் கட்டிக்கொண்டு வலித்தல் தீர இளமை சுறுசுறுப்புடன் வாழுவதற்கு | உடல் உஷ்ணத்தை தணிக்க | முதுமை அடைவதை தடுத்து, உடல் பலம் பெற | உடல் பலவீனம் நீங்க சர்க்கரை நோயினால் ஏற்படும் எரிச்சல், பாத எரிச்சல் - கை கால் எரிச்சல் குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள்
கட்டிகள் கரைய, குணமாக, அடிபட்ட வீக்கம், காயங்களுக்கு, நரம்பு சிலந்தி, சிலந்தி புண், வீக்கம் ஆற சித்த மருத்துவ குறிப்புக்கள் மஞ்சள் காமாலை குணமாக | கல்லிரல் குறைபாடு நீங்க | இரத்தம் தூய்மையாக | பாண்டு தீர - சித்த மருத்துவ குறிப்புக்கள் பித்த நோய்கள் குணமாக | பித்த மயக்கம் தீர | பித்த நீர் மலத்துடன் வெளியேற | உடல் உஷ்ணத்தை தணிக்க | கல்லடைப்பு
View all comments

வாசகர் கருத்து