முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு இடையில் பாராளுமன்றத்தில் மின்சார சட்டத்திருத்த மசோதா தாக்கல்: நிலைக்குழுவுக்கு அனுப்பியது மத்திய அரசு

திங்கட்கிழமை, 8 ஆகஸ்ட் 2022      இந்தியா
Central-government 2021 07

பாராளுமன்றத்தில் நேற்று தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களின் கடும் எதிர்ப்புக்கு இடையில் மின்சார சட்டத்திருத்த மசோதாவை மக்களவையில் மத்திய மின்துறை அமைச்சர் ஆர்.கே.சிங் நேற்று தாக்கல் செய்தார்.

மின்சார சட்டத்திருத்த மசோதாவுக்கு திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சிகள், அறிமுக நிலையிலேயா எதிர்ப்பு தெரிவித்த நிலையில், பல எதிர்ப்புகளை மீறி தற்போது மக்களவையில் மின்சார சட்டத்திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மின் விநியோகத்தை தனியாருக்கு விடுவது, மின்சார ஒழுங்குமுறை ஆணையங்களுக்கு கூடுதல் அதிகாரம் வழங்க சட்டத்திருத்தம், குறைந்தபட்சம், அதிகபட்ச மின்கட்டணத்தை நிர்ணயிப்பது தொடர்பாகவும் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்படுகிறது.

உற்பத்தி செலவுக்கு இணையாக கட்டணம் இருந்தால் விநியோக நிறுவனங்களை சிறப்பாக நடத்த முடியும் என மசோதா கூறுகிறது. மானியத்தை கணக்கில் கொள்ளாமல் மின் கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட வேண்டும் என்பது சட்டத்தின் முக்கிய அம்சமாக உள்ளது. 

மேலும் மின்சார சட்டத்திருத்த மசோதாவை பாராளுமன்ற நிலைக்குழுவுக்கு மத்திய அரசு அனுப்பி வைத்துள்ளது. எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பால் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட மசோதா நிலைக்குழுவுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்திற்கு பாதிப்பு?

பாராளுமன்றத்தில் இந்த மசோதா நிறைவேற்றப்படும் பட்சத்தில், தமிழகத்தில் பல்வேறு மாற்றங்கள் வர வாய்ப்புள்ளது.

  • 1. தமிழகத்தில் வழங்கப்பட்டு வரும் முதல் 100 யூனிட் இலவச மின்சார திட்டம் ரத்து செய்யப்படலாம்.
  • 2. மின் கட்டணத்தை மத்திய ஒழுங்குமுறை ஆணையமே இனி நிர்ணயம் செய்யும் என்பதால், தமிழகத்தில் மின்கட்டண உயர்வு ஏற்படலாம்.
  • 3. மின் விநியோகம் தனியாரிடம் தரப்படும்.
  • 4. தனியாருக்கு மின் விநியோகம் வழங்கப்பட்டால், மின்வாரியத்தில் வேலையிழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.
  • 5. விவசாயிகளுக்கான இலவச மின்சார திட்டம் ரத்து செய்யப்படலாம்.
  • 6. மாநிலத்தின் மின் உற்பத்தியை மாநில அரசின் ஒப்புதல் பெறாமல், பிற மாநிலங்களுக்கு பகிர்ந்து அளிக்கலாம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து