முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாட்டில் 2030ம் ஆண்டுக்குள் 220 விமான நிலையங்கள் செயல்பாட்டில் இருக்கும்: மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் தகவல்

திங்கட்கிழமை, 8 ஆகஸ்ட் 2022      இந்தியா
Jyotir-Aditya 2022-08-08

நாட்டில் 2030ம் ஆண்டுக்குள் 220 விமான நிலையங்கள் செயல்பாட்டில் இருக்கும் என்று மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். கடந்த ஐந்து ஆண்டுகளில் ஒன்றரை லட்சம் விமானங்கள் போக்குவரத்து பயன்பாட்டிற்காக கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

உள்நாட்டில் விமான சேவையை அதிகரிக்க, ஆகாசா ஏர் விமான நிறுவனத்தின் முதல் விமான சேவையை அமைச்சர் ஜோதிர் ஆதித்யா சிந்தியா தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- உதான் யோஜனா திட்டத்தின் கீழ் கடந்த 5 ஆண்டுகளில் 1,93,000 விமானங்கள் பயன்பாட்டிற்கு சாத்தியப்படக்கூடிய அளவிலான நிதியின் அடிப்படையில் தொடங்கப்பட்டுள்ளன. உதான் யோஜனா திட்டத்தின் கீழ் சில டிக்கெட்டுகளுக்கான கட்டணத்தையும் அரசே ஏற்கும்.

2027ஆம் ஆண்டுக்குள் 40 கோடி விமானப் பயணிகளும், 1,200 விமானங்களையும், 2030ஆம் ஆண்டுக்குள் 220 விமான நிலையங்களையும் இந்தியா கொண்டிருக்கும். இதற்கு முன், 74 விமான நிலையங்கள் மட்டுமே இருந்தன, கடந்த 8 ஆண்டுகளில் அந்த எண்ணிக்கை 137 ஆக உயர்ந்துள்ளது. 2030-க்குள் 220 விமான நிலையங்களாக உயர்த்த அரசு திட்டமிடப்பட்டுள்ளது. ஆண்டுக்கு 15 சதவீத திறன் அல்லது 100 முதல் 110 விமானங்களை சேர்க்க உள்ளோம். 2027ஆம் ஆண்டுக்குள் 1,200 விமானங்களை இந்தியாவில் பயன்பாட்டிற்கு கொண்டுவர எதிர்பார்த்துள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து