முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இயக்குனருக்கு முழு சுதந்திரம் கொடுப்பேன் - சூர்யா

செவ்வாய்க்கிழமை, 9 ஆகஸ்ட் 2022      சினிமா
Surya 2022-08-09

Source: provided

T.R.ரமேஷ் & S.ஜாஹிர் ஹுசைன்  தயாரிப்பில், எஸ்.ஜே சூர்யா யாஷிகா ஆனந்த் நடிப்பில், வெங்கட் ராகவன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் கடமையை செய். இந்தவாரம் இத்திரைப்படம் திரைக்கு வரவுள்ள நிலையில் இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. அதில் பேசிய SJ சூர்யா, இயக்குனர் வெங்கட் இந்த கதையை சொல்லும் போது, இந்த கண்டெண்ட் முக்கியமான ஒன்று என என்னால் உணர முடிந்தது. இந்த படத்தில் நடிக்க வேண்டுமென தோன்றியது.  இந்த பாத்திரம் வித்தியாசமானது, ஒரு வகை கோமோவில் இருக்கும் பாத்திரம்  அமைதியாய் இருக்க வேண்டும், அதே நேரத்தில் நடிப்பை வெளிப்படுத்த வேண்டும். டப்பிங் பேசும்போது என் வாய் அசையாது தொண்டை அசைந்திருக்கும் அதற்கேற்றாற் போல் பேசினேன். இந்தப்படம் மிக வித்தியாசமான படம். நான் இயக்குனருக்கு முழு சுதந்திரம் கொடுப்பேன், அவர்களை தாண்டி நான் எதையும் செய்ய மாட்டேன். இந்த படம்  ஹிட், கண்டிப்பாக இந்த படம் இந்தியில் ரீமேக் ஆகும். அனைவருக்கும் நன்றி என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து