முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கலாசாரத்தை சொல்லும் விருமன் - கார்த்தி நெகிழ்ச்சி

செவ்வாய்க்கிழமை, 9 ஆகஸ்ட் 2022      சினிமா
Karthi 2022-08-09

Source: provided

சூரியாவின் டூடி தயாரிப்பில் முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள விருமன் திரைப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு சமீபத்தில் நடைபெற்றது. அதில் நடிகர்கள் கார்த்தி, சூரி, ராஜ்கிரன், நடிகை அதிதி, சரண்யா பொன்வண்ணன்,  உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். அப்போது பேசிய நடிகர் கார்த்தி,  கிராமமும், அதன் கலாச்சாரமும் இன்றும் மாறாமல் உள்ளன.  கிராமத்தில் உறங்கும் போது தான் எந்த இடையூறும் இல்லாமல் உள்ளது, நிம்மதி இருக்கிறது என கூறினார். மேலும், கிராமத்துத் திரைப்படங்கள் தான், நம் கலாச்சாரத்தை சொல்கின்றன. இப்போது  உறவுகள் குறித்த முக்கியத்துவம் குறைந்து உள்ளது.  எனவே உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திரைப்படங்கள் வெளியாவது அவசியம்,  அதை முத்தையா தன் படங்கள் மூலம் தொடர்ந்து சொல்லிக் கொண்டே இருக்கிறார் என கூறினார். இந்த திரைப்படத்தில் அப்பா -  மகன் உறவு குறித்து படமாக்கியுள்ளோம். அத்துடன் நடிகர் ராஜ்கிரன் திரைப்படங்களில் நல்ல விஷயங்களை கூற வேண்டும், தவறான விஷயங்களை சொல்லி விடக்கூடாது என்பதில் கவனமாக இருப்பார்.  அதை நமக்கும் சொல்லிக் கொண்டே இருப்பார் என அவரையும் பாராட்டினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து