முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முல்லை பெரியாறு அணையில் 13 மதகுகளும் திறப்பு: தமிழக பொறியாளர்கள் ஆய்வு

செவ்வாய்க்கிழமை, 9 ஆகஸ்ட் 2022      தமிழகம்
Periyar-dam 2022-08-09

Source: provided

தேனி : இடுக்கி அணைக்கு உபரி நீர் வெளியேற்றம் செய்ய முல்லைப் பெரியாறு அணையில் உள்ள, 13 மதகுகளும் நேற்று திறக்கப்பட்டதை  தமிழக பொறியாளர்கள் ஆய்வு நடத்தினர்.

தற்போது பெய்து வரும் தொடர் மழையால் முல்லைப் பெரியாறு அணையில் நீர்மட்டம் உயர்வைக் கட்டுப்படுத்த ரூல் கர்வ் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது. அதே நேரத்தில் அணைக்குள் வரும் நீர், இடுக்கி அணைக்கு உபரி நீராக கடந்த 4-ம் தேதி முதல் திறந்து விடப்பட்டுள்ளது. 

முல்லைப் பெரியாறு அணையில் இருந்து கேரள மாநிலம் இடுக்கி அணைக்கு உபரி நீர் வெளியேற 13 மதகுகள் உள்ளன. கடந்த 4-ம் தேதி முதல் ஒவ்வொரு மதகாக திறக்கப்பட்டது, நேற்று 13 மதகுகளும் 90 செ.மீ. உயரத்திற்குத்  திறக்கப்பட்டதால், உபரி நீர் விநாடிக்கு 9,677 கன அடியாகச் சென்றது. 

அணையில் உள்ள அனைத்து மதகுகளும் திறக்கப்பட்டதால், பெரியாறு வைகை பாசன பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் கிறிஸ்து கேச குமார் மதகுகள் வழியாக உபரி நீர் வெளியேறுவது, பிரதான அணை, பேபி அணை, சரங்கம் மற்றும் காலரி பகுதிகள், அணையின் நீர் கசியும்,  சீப்பேஜ் வாட்டர் அளவு ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு நடத்தினார். 

இந்த ஆய்வின் போது பெரியாறு அணை சிறப்பு கோட்ட செயற்பொறியாளர் சாம்இர்வின், பெரியாறு வைகை பாசன உத்தமபாளையம் கோட்ட பொறியாளர் அன்புசெல்வம், பெரியாறு அணை உதவி செயற்பொறியாளர் குமார், மயில்வாகனன், உதவி பொறியாளர்கள் பி.ராஜகோபால், மாய கிருஷ்ணன், முரளிதரன், நவீன் குமார் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து