முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புதுச்சேரி பட்ஜெட்டுக்கு நிதி பெற்றுத்தராத கவர்னர் பதவி விலகக்கோரி தி.மு.க.-காங். வெளிநடப்பு

புதன்கிழமை, 10 ஆகஸ்ட் 2022      இந்தியா
DMK-Congress 2022-08-10

Source: provided

புதுச்சேரி : பா.ஜ.க. கூட்டணியிலிருந்து புதுச்சேரி முதல்வர் வெளியேற வலியுறுத்தியும், பட்ஜெட்டுக்கு நிதி பெற்றுத் தராத கவர்னர் பதவி விலகக் கோரியும் திமுக - காங்கிரஸ் வெளிநடப்பு செய்தது.

பா.ஜ.க.வுக்கு எதிர்ப்பு தெரிவித்து, பீகார் முதல்வர் நிதிஷ்குமார் போன்று புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியும் பா.ஜ.க. கூட்டணியிலிருந்து வெளியேறி பதவி விலக வேண்டுமென சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் சிவா வலியுறுத்தியுள்ளார். நிதி பெற்று தராத தமிழிசையை கவர்னர் பதவியில் இருந்து விலகக்கோரி திமுக-காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

மத்திய அரசு புதுச்சேரி மாநில பட்ஜெட்டுக்கு இதுவரை அனுமதி வழங்காத நிலையில், புதுச்சேரி சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத் தொடர் நேற்று துணைநிலை கவர்னர் உரையுடன் தொடங்கியது. 

இந்நிலையில் புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் - பா.ஜ.க. கூட்டணி அரசு முழு பட்ஜெட்டை தாக்கல் செய்யாததை கண்டித்தும், மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்றாததை கண்டித்து துணைநிலை கவர்னர் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டப்பேரவை எதிர்கட்சி தலைவர் சிவா தலைமையில் திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் நாஜிம், அனிபால் கென்னடி, சம்பத், செந்தில்குமார், நாக தியாகராஜன் மற்றும் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் வைத்தியநாதன், ரமேஷ் பரம்பந்த் உள்ளிட்டோர் பேரவைக்கு கருப்பு சட்டை அணிந்து வந்தனர். பின்னர் துணைநிலை கவர்னர் உரையை வாசிக்கும் போது அதை எதிர்த்து பேரவையில் கோஷமிட்டனர்.

அதைத்தொடர்ந்து திமுக மற்றும் காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர்கள் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். வெளிநடப்பு செய்தபோது "கவர்னர் பதவி அரசு பதவியா- கட்சி பதவியா- மத்திய அரசிடமிருந்து நிதி பெற்றுத் தராத ஆளுநரே பதவி விலகு" என கோஷமிட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து