முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காமன்வெல்த் பென்சிங் சாம்பியன்: பவானி தேவி தங்கம் வென்றார்

புதன்கிழமை, 10 ஆகஸ்ட் 2022      உலகம்
Bhavani-Devi 2022 08 10

Source: provided

பர்மிங்காம் : காமன்வெல்த் பென்சிங் சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த பவானிதேவி தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார். சீனியர் மகளிர் சேபர் பிரிவு போட்டியில் ஆஸ்திரேலிய வீராங்கனையை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தைப் பெற்றார் பவானி தேவி.

ஜெர்மனிடம் தோல்வி...

முன்னதாக கடந்த ஜூலை மாதம் நடந்த சர்வதேச ஃபென்சிங் சாம்பியன்ஷிப் போட்டியில் 12-15 என்ற புள்ளிகள் கணக்கில் ஜெர்மனியின் லரிஸா எலிஃபரிடம் தோல்வியடைந்தார். 2019 உலக ஃபென்சிங் சாம்பியன்ஷிப் போட்டியில் அவர் பட்டம் வென்றிருந்தார். ஆனால் கடந்த ஜூலையில் அவர் அந்த வாய்ப்பை நழுவவிட்டார்.

ஆஸி. வீராங்கனையை...

இந்நிலையில் லண்டனில் நடந்த காமன்வெல்த் ஃபென்சிங் சாம்பியன்ஷிப் போட்டியில் பவானிதேவி தங்கம் வென்றுள்ளார். இந்தப் போட்டியில் தேவி 15-10 என்ற கணக்கில் ஆஸ்திரேலியாவின் வெரோனிகா வாசிலேவாவை வீழ்த்தி பட்டத்தை வென்றுள்ளார். காமன்வெல்த் ஃபென்சிங் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிகள் வரும் ஆகஸ்ட் 20ல் நடைபெறுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து