முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குழந்தைகளுடன் ரக்‌ஷா பந்தன் கொண்டாடினார் பிரதமர் மோடி

வியாழக்கிழமை, 11 ஆகஸ்ட் 2022      இந்தியா
modi------2022-08--11

Source: provided

புதுடெல்லி: பிரதமர் அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்களின் பெண் குழந்தைகளுடன் பிரதமர் மோடி நேற்று ரக்‌ஷா பந்தன் பண்டிகையை கொண்டாடினார்.

ரக்‌ஷா பந்தன் பண்டிகை நேற்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்தியாவின் மிகப் பழமையான பண்டிகைகளில் ரக்‌ஷா பந்தன் ஒன்று ஆகும். சகோதரிகள் சகோதரர்களுக்கு ராக்கி கயிறு கட்டி, சகோதரத்துவத்தைக் வெளிப்படுத்தும் ரக்‏ஷா பந்தன் பண்டிகை திருநாள் நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது.

இந்த நிலையில், பிரதமர் அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்களின் பெண் குழந்தைகளுடன் பிரதமர் மோடி ரக்‌ஷா பந்தன் பண்டிகையை கொண்டாடினார். பிரதமர் அலுவலகத்தில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்கள், அலுவலக உதவியாளர்கள், தோட்டக்காரர்கள்,டிரைவர்கள் மற்றும் பிற பணியாளர்களின் குழந்தைகள் பிரதமர் மோடியின் கையில் ராக்கி கயிறுகளை கட்டினர். இது தொடர்பாக வீடியோவை பிரதமர் அலுவலகம் வெளியீட்டுள்ளது.

முன்னதாக ரக்‌ஷா பந்தன் பண்டிகையையொட்டி பிரதமர் மோடி டுவிட்டர் பதிவில், ரக்‌ஷா பந்தன் திருநாளை முன்னிட்டு நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என பதிவிட்டிருந்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து