முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நரேந்திர மோடியால் பிரதமராக முடியும் என்றால் நிதிஷ் குமாரால் ஏன் முடியாது? பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் கேள்வி

வியாழக்கிழமை, 11 ஆகஸ்ட் 2022      இந்தியா
thejasvi-------2022-08--11

Source: provided

பாட்னா: நரேந்திர மோடியால் பிரதமராக முடியும் என்றால் நிதிஷ் குமாரால் ஏன் முடியாது? என்று கேள்வி எழுப்பியுள்ள பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ், நரேந்திர மோடிக்கு எதிரான ஒரு ஆளுமையை இந்திய மக்கள் விரும்புவதாகவும் தெரிவித்தார்.

பா.ஜ.க. கூட்டணியில் இருந்து ஐக்கிய ஜனதாதளம் விலகியது. இதனால் பீகார் முதல் மந்திரி நிதிஷ்குமார் பதவியை ராஜினாமா செய்தார். இந்த நிலையில், பீகார் மாநில முதல் மந்திரியாக 8-வது முறையாக ஐக்கிய ஜனதா தள தலைவர் நிதிஷ்குமார் நேற்று முன்தினம் பதவியேற்று கொண்டார். காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதாதளம் உள்ளிட்ட கட்சிகள் கொண்ட கூட்டணியின் முதல் மந்திரியாக நிதிஷ்குமார் பதவியேற்றார். பீகார் மாநில துணை முதல் மந்திரியாக ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் தேஜஸ்வி யாதவ் பதவியேற்றுக்கொண்டார்.

இதனை தொடர்ந்து 2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள பிரதமர் தேர்தலில் நிதிஷ்குமார் பாஜக-வுக்கு எதிராக போட்டியிட வாய்ப்புள்ளதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இது குறித்து பேசிய தேஜஸ்வி யாதவ் கூறுகையில், " நிதிஷ் குமார் அவர்களுக்கு நிர்வாக அனுபவம் இருக்கிறது. சமூக அனுபவமும் உண்டு. ராஜ்யசபாவைத் தவிர, அனைத்து சபைகளிலும் அவர் பணியாற்றியுள்ளார். மத்திய அமைச்சராக இருந்து இருக்கிறார். நரேந்திர மோடியால் பிரதமராக முடியும் என்றால் ஏன் நிதிஷ் ஜியால் முடியாது.

பா.ஜ.க. கூட்டணியில் நிதிஷ் குமார் மிகவும் அசௌகரியமாக இருப்பதைக் காண முடிந்தது. தற்போதைய நிலையில் எதிர்க்கட்சிகள் ஒன்றாக இணைந்து செய்லபட வேண்டும். நரேந்திர மோடிக்கு எதிரான ஒரு ஆளுமையை இந்திய மக்கள் விரும்புகிறார்கள்" என தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து